சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தினகரன் ஒரு மண் குதிரை.. அவரை நம்பி ஆற்றில் இறங்கலாமா.. அதான் அல்வா கொடுத்துவிட்டார்- ஜெயக்குமார்

Google Oneindia Tamil News

Recommended Video

    தினகரனை நம்பி இறங்கினால் இதான் நிலை - ஜெயக்குமார்-வீடியோ

    சென்னை: தன்னை நம்பி சென்றவர்களுக்கு திருநெல்வேலி அல்வா கொடுத்து விட்டார் டிடிவி தினகரன் என அமைச்சர் டி. ஜெயக்குமார் தெரிவித்தார்.

    சென்னை நந்தனத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேற்று மாலை அணிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேசியமும், தெய்வீகமும் ஒருங்கே பெற்ற தலைவர் முத்துராமலிங்க தேவர். நேதாஜி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தபோது பெரும்பாலான தமிழர்களை அனுப்பி இந்திய சுதந்திரத்துக்காக பாடுபட்டார்.

    [முதல்ல பிள்ளை பொறக்கட்டும்.. பிறகு பெயர் வைப்பது குறித்து யோசிப்போம்!]

    பரிதாபம்

    பரிதாபம்

    டிடிவி தினகரனை பொருத்தவரை அவர் ஒரு மண் குதிரை. அவரை நம்பி ஆற்றில் இறங்கிய 18 எம்எல்ஏக்களின் நிலையை நினைத்து நாங்கள் உண்மையில் பரிதாபப்படுகிறோம்.

    அண்ணா கூற்று

    அண்ணா கூற்று

    18 எம்எல்ஏக்களும் டிடிவி தினகரன் அல்வா கொடுத்துவிட்டார். அவர் தமிழக அரசியலில் எடுபடாதவர். அதனால் அவரை பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. மறப்போம், மன்னிப்போம் என்று அண்ணா கூறுவது உண்டு.

    இனி நடப்பது

    இனி நடப்பது

    அந்த வகையில் நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். எனவே சசிகலா குடும்பத்தினரை தவிர வேறு யார் வேண்டுமானாலும் திரும்பி வரலாம். கட்சி அவர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ளும்.

    இருப்பு

    இருப்பு

    தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுக்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் மருந்து மாத்திரைகள் தமிழ்நாட்டில் அனைத்து ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்றார் ஜெயக்குமார்.

    English summary
    Minister Jayakumar says that TTV Dinakaran is a clay horse. 18 MLAs are trying to cross the river using that clay toy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X