அன்றும் இன்றும் என்றும் அம்மா.. பச்சைக் கலரில் ஜெயக்குமார் நெகிழ்ச்சி வாழ்த்து
சென்னை: ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, "அன்றும் இன்றும் என்றும் "அம்மா" என்று தன் கைப்பட பச்சை கலரில் வாழ்த்து செய்தியை எழுதி கையெழுத்து போட்டுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.
ரொம்ப ரொம்ப மனசை பாதிக்கிற அது நல்லதோ, கெட்டதோ எதுவாக இருந்தாலும் அதை தன் லெட்டர் பேடில் கைப்பட எழுதி வெளிப்படுத்துபவர் அமைச்சர் ஜெயக்குமார்.

ஜெயலலிதா பிறந்த நாள் என்பதால், இன்றும் எழுதி மரியாதை செலுத்தி உள்ளார். அதில், "பிப்ரவரி-24 அன்றும் இன்றும் என்றும் அம்மா" என்ற தலைப்பில் எழுதி இருப்பதாவது:
அன்று அம்மாவின் நிழலில் விழுதாய்!
இன்று அம்மாவின் நினைவில் விதையாய்!
என்றும் அம்மாவின் வழியில் விசுவாசியாய்!
கலங்கும் இதயத்தில் மறையாத
நினைவுகளுடன், நீங்கள் விட்டுச்சென்ற
லட்சிய பாதையில்
என்றும் தொடரும்
எங்கள் - பயணம்! -
டி.ஜெயக்குமார்" - என்று பச்சை கலரில் எழுதி கையெழுத்து போட்டுள்ளார். கையெழுத்து பார்க்க நன்றாகவே இருக்கிறது.
இதன் பக்கத்திலேயே ஒரு விளம்பரம் போடப்பட்டுள்ளது. அது 1990-ம் ஆண்டு ஜெயலலிதா பிறந்த நாள் அன்று, "நமது எம்ஜிஆர்" பத்திரிகையில் ஜெயக்குமார் பதிவிட்டது. அப்போது ஜெயக்குமார் எம்ஜிஆர் இளைஞர் அணியிலும், ராயபுரம் தொகுதி துணை தலைவராகவும், இருந்த சமயம் போலும்.
அந்த விளம்பரத்தில் ஜெயக்குமார் மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் இருக்கும் குடும்ப புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. பேன்ட்-ஷர்ட் போட்டுக்கொண்டு அமைச்சர் ஜெயக்குமார் ஸ்மார்ட் லுக்குடன் இருக்கிறார். கிட்டத்தட்ட 28 வருடங்களாக அம்மாவின் விசுவாசி என்பதை இந்த ஒரே ஒரு லட்டர்பேட் பிறந்த நாள் வாழ்த்துமூலம் நிரூபித்துவிட்டார் அமைச்சர்!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications