திமுகவில் பூகம்பம் வெடிக்க போகுது.. என்ன இப்படி சொல்லிட்டார் ஜெயக்குமார்.. என்ன நடக்க போகுதோ!
திமுகவில் பூகம்பம் வெடிக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்
சென்னை: "கூடிய சீக்கிரம் திமுகவில் பூகம்பம் வெடிக்க போகுது" என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி உள்ளதன் அர்த்தம் எளிதாக விளங்கவில்லை.
ராயபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 332 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அமைச்சர்கள் ஜெயக்குமார், சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும்போது, "நடந்து முடிந்த தேர்தலில் திமுகவின் நிலை பரிதாபமாக உள்ளது. மெகா கூட்டணின்னு சொன்னாங்க, ஆனால் இன்னைக்கு அவங்க நிலைமை அதல பாதாளத்தக்கு போய்விட்டது. குடும்பத்தில் குழப்பம், கட்சியில் சீனியர்களை மதிக்காது, உதயநிதியை முன்னிலைப்படுத்திய நிலைகளால் திமுகவின் உள்ளடி வேலைகள் செய்தனர். விரைவில் திமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடிக்கும்" என்றார்.
இடைத்தேர்தலில் திமுக ஏன் தோற்றது என்றதற்கு காரணங்களை அமைச்சர் ஜெயக்குமாரே அடுக்கி விளக்கிவிட்டார். இதன் உண்மைதன்மை ஒரு பக்கம் இருந்தாலும், "பூகம்பம் வெடிக்கும்" என்று ஏன் சொல்கிறார், எதை சொல்கிறார் என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை உட்கட்சி பூசலால் திமுகவில் பூகம்பம் வெடிக்க போகிறதா, அல்லது ரெயிடு ஏதேனும் திமுக தரப்பில் நடக்க உள்ளதா தெரியவில்லை.
ஒருமுறை எச்.ராஜாகூட "இங்க காலேஜ் நடத்தி வர்றாரே.. ரூ.42 கோடி ஊழல் செய்துள்ளார்... அவர்தான் அடுத்த கைது" என்று ஆரூடம் சொல்லி இருந்தார். அதனால் திமுகவில் வெடிக்க போகும் பூகம்பத்திற்கான காரணம் எதுவென்றுதான் நமக்கு பிடிபடவில்லை.


Click it and Unblock the Notifications
