சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பந்திக்கே அழைக்கவில்லை.. வாழை இலை ஓட்டை.. தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஜெயக்குமார் பதிலடி

Google Oneindia Tamil News

Recommended Video

    தங்கத்தமிழ்ச்செல்வனுக்கு ஜெயக்குமார் பதிலடி- வீடியோ

    சென்னை: சசிகலா, டிடிவி தினகரன் தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

    20 தொகுதிகளின் இடைத்தேர்தல் அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தெரியாமல் அதிமுக, திமுக உள்பட அனைத்து கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

    minister jayakumar says there is of joining of admk with ammk

    அதே நேரத்தில் டிடிவி தினகரனுக்கு சப்போர்ட் செய்து நீதிமன்றம் வரைக்கும் சென்று எம்எல்ஏ பதவியை காவு கொடுத்துவிட்டுள்ள தங்கத்தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலரும் இடைத்தேர்தல் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர்.

    அதற்குள், அமமுகவை அதிமுக இணைக்க தயார் என்று தங்கத்தமிழ்ச்செல்வன் தெரிவித்து தற்போது தமிழக அரசியலில் மற்றொரு விவாதத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா, டிடிவி தினகரன் தவிர வேறு யார் அதிமுகவுக்கு வந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

    அதிமுக என்பது மிகப்பெரிய இயக்கம் என்ற அவர், சசிகலா, டிடிவி தினகரனை மட்டும் சேர்க்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். பந்திக்கே அழைக்கவில்லை... அதற்குள் வாழை இலை ஓட்டை என்று தங்கத் தமிழ்ச்செல்வனுக்கு பதில் கொடுத்துள்ளார்.

     உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு! உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

    கட்சிகள் இணைப்பில் நியாயம் இருக்க வேண்டும் என்றும், இமயமலையுடன் காளான் இணைய முடியாது என்றும் தெரிவித்துள்ளார். இதே கருத்தையும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனும் கூறியுள்ளார்.

    English summary
    tamilnadu fisheries minister jayakumar says that there is of no joining of admk with ammk. He regrets, ttv dinakaren supporter thangatamilsevans opinion about party joining.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X