யார்னு பார்த்தீங்களா.. தலையில கிரீம் கலர் தொப்பி.. "நார்த் மெட்ராஸ்" ஜேம்ஸ் பாண்ட்.. சூப்பரப்பு!
அமைச்சர் ஜெயக்குமாரின் செல்பி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது
சென்னை: கிரீம் கலர் டிரெஸ்ஸில், கிரீம் கலர் தொப்பி போட்டுக் கொண்டு.. போட்டோவில் ஒரு லுக் விட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
இப்போதெல்லாம் அமைச்சர் ஜெயக்குமாரின் ஃபேஸ்புக் பக்கத்தில் நுழைவதற்கே சற்று மிரட்சியாக உள்ளது.. விதவிதமாக போட்டோக்களில் ஸ்டைலாக நின்று கொண்டிருக்கிறார்.
இடுப்பில் கை வைத்து கொண்டு மீனவ கிராமங்களை பார்வையிடுகிறார்.. இன்னொரு போட்டோவில் மீனவ குழந்தைகளை இடுப்பில் தூக்கி வைத்து கொஞ்சி கொண்டிருக்கிறார்.

சீரியஸ்
இன்னொரு போட்டோவில் அதிகாரிகள் புடைசூழ, ஏதோ ஆவணங்களை சீரியஸாக சரிபார்த்து கொண்டிருக்கிறார். இப்படி வகை வகையாக போட்டோக்களை போட்டு, நம்மை மிரட்டி கொண்டிக்கும் ஜெயக்குமார், இன்னொரு போட்டோவையும் பதிவிட்டுள்ளார்.

கண்ணாடி
அப்படி ஒரு போட்டோவில் யாருமே இதுவரை அவரை பார்த்திருக்க மாட்டார்கள்.. கிரீம் கலர் டிரெஸ், அதற்கு மேட்சாக ஒரு தொப்பி, கண்ணாடி அணிந்திருக்கிறார்.. பார்ப்பதற்கு மெய்யாலுமே ஜேம்ஸ் பாண்ட் மாதிரியே இருக்கிறார்.. இந்த போட்டோவை யார் எடுத்தார்கள் தெரியவில்லை.. குளோஸ்அப்பில் எடுக்கப்பட்டிருப்பதால், இன்னும் மிரட்டலாக இருக்கிறது. இவரே எடுத்த செல்பி என்கிறார்கள்.

கெட்-அப்
இதை பார்த்த பலரும் ஒருவேளை அமைச்சர், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க களமிறங்க போகிறாரோ என்று சந்தேகங்களை எழுப்பி வருகிறார்கள். சொல்ல முடியாது, திடீரென ஆடுபவர், திடீரென பாடுபவர், திடீரென குழந்தைகளோடு கேரம்போர்டு விளையாடுபவர், திடீரென நடித்தாலும் நடிப்பார் என்று சொல்கிறார்கள்.. இப்படி எதுக்காக ஜேம்ஸ்பாண்ட் மாதிரி கெட்டப்பில் செல்பி எடுத்து கொண்டீர்கள் என்று கேட்டால், சும்மா ஜாலிக்காக எடுத்துக்கிட்டேன்.. காலேஜ் ஞாபகம் வந்துடுச்சு.. அதான்" என்கிறார்.

பிரச்சனைகள்
ஆனால், ஒருவிஷயத்தில் அமைச்சர் ஜெயக்குமாரை பாராட்டியே ஆக வேண்டும்.. தனக்கு எதிராக பிரச்சனைகள், சூழ்ந்தாலும், பழிவாங்கல்கள் தொடர்ந்தாலும், விமர்சனங்கள் எழுந்தாலும், சர்ச்சைகள் கிளம்பினாலும், எதுவானாலும் அசால்ட்டாக தூக்கி போட்டுவிட்டு அடுத்த அடிக்கு முன்னேறி கொண்டிருக்கிறார். அதிலும் அதே புன்சிரிப்புடன் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய ஆற்றலும் நிறைந்தவராக இருக்கிறார்.

கலவை
தன் துறை மட்டுமின்றி, பொதுமக்கள் யாராவது புகார்களை கொண்டுவந்தால், அதையும் உடனடியாக தீர்த்து வைத்து அனுப்பி வைக்கிறார். என்னதான் எதிர்க்கட்சிகளுக்கு சீரியஸான பதில்களை அடிக்கடி சொல்லி திணறடித்தாலும், ஏதாவது வித்தியாசமான ஒன்றை செய்வதில் ஆர்வமுடையவராகவும் இருக்கிறார். ஆக மொத்தத்தில், சீரியஸ் & டேக் இட் ஈசி என ரெண்டும் கலந்த கலவையாக நடைபோட்டு கொண்டிருக்கிறார் ஜெயகுமார்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications