கருப்பு சிவப்பு இருந்தால்தான் தமிழ்நாடு சுபிட்சமாகும்.. அருப்புக்கோட்டையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்!
அருப்புக்கோட்டை: கருப்பு சிவப்பு இருந்தால் தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். கருப்பு சிவப்பு இருந்தால் தான் அனைவரும் மரியாதையாக வாழ முடியும் என அருப்புக்கோட்டையில் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேசினார்.
Recommended Video
விருதுநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அருப்புக்கோட்டையில் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்தப் பயிற்சி பாசறையில் மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் திராவிட இயக்க செயற்பாட்டாளர் டான் அசோக் மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் தாயகம் கனி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்
நிகழ்ச்சியில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், எதிர்காலத்தில் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு திமுக இருக்க வேண்டும். திமுக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட சுயமரியாதை உணர்வு இருக்க வேண்டும் என்ற எண்ணம் திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் இருக்கிறது.

இந்தியாவில் தமிழ் மொழி
இந்தியாவில் தமிழ் மொழியின் தொன்மை திராவிடத்தின் தொன்மை பற்றி இளைஞர்கள் அறிந்து கொள்வதற்காகவே திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தப்படுகிறது. தந்தை பெரியார் இல்லை என்றால் தற்போது நாகரீக காலத்தில் கூட நாம் தரையில் தான் அமர்ந்திருப்போம்.

ஜாதி பாகுபாடு
ஜாதி பாகுபாடு உயர்ந்தவர் தாழ்ந்தவர் என அனைத்தையும் மாற்றியவர் தந்தை பெரியார் நமக்கெல்லாம் அங்கீகாரத்தை அளித்தவர் தந்தை பெரியார். 50 ஆண்டு காலத்திற்கு முன் நமது மூதாதையர்கள் சட்டை அணிய முடியாது. குறிப்பிட்ட தெருவில் செருப்பு அணிந்து கொண்டு செல்ல முடியாது.

தந்தை பெரியார்
அதை எல்லாம் மாற்றியவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி. அனைவரும் சமம் என சொல்வது தான் திராவிடம். கருப்பு சிவப்பு இருந்தால் தான் தமிழ்நாடு சுபிட்சமாக இருக்கும். கருப்பு சிவப்பு இருந்தால் தான் நீங்களும் நானும் மரியாதையாக வாழ முடியும் தமிழ் நாடு முன்னேற முடியும் என பேசினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications