1990- களில் சைதாப்பேட்டையில் ஓட்டு கேட்டப்ப என் கழுத்தில் இவ்ளோ பெரிய கத்தி வச்சாங்க.. கே.என்.நேரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1990 களில் சைதாப்பேட்டை தொகுதியில் ஓட்டு கேட்க வந்த போது என் கழுத்தில் சிலர் கத்தியை வைத்தனர் என பழைய நினைவுகளை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை , திவான் பாஷ்யம் தெருவில் புதிதாக அமைக்கப்பட உள்ள கழிவுநீர் உந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த திட்டம் ரூ. 2.35 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது.

விழாவில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு , மருத்துவம் மற்ற மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 மா சுப்பிரமணியன்

மா சுப்பிரமணியன்

இந்த விழாவில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசுகையில் திவான் பாஷ்யம் தோட்ட தெருவில் உள்ள கழிவுநீரை, அகற்ற பல முயற்சி எடுத்தும் முடியாமல் இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று அமைச்சர் நேருவிடம் தெரிவித்தோம். உடனடியாக இங்கு மினி பம்பிங் ஸ்டேஷன் அமைக்க அமைச்சர் நேரு உத்தரவிட்டார்.

1000 பேர் மகிழ்வர்

1000 பேர் மகிழ்வர்

இதனால், இந்த பகுதியில் வசிக்கும் 1000 பேர் மழை காலத்தில் நிம்மதியாக இருப்பார்கள். திவான் பாஷ்யம் தெருவில் தான் பசுமை தமிழகம் என்ற திட்டத்தை முதல்வர் துவங்கி வைத்த பகுதி தான் இது. இந்த திட்டத்தின் 1000 ஆவது மரத்தை மறைந்த நடிகர் விவேக் நட்டு வைத்தார். அந்த மரங்கள் தற்பொழுது பயன்களையும் கொடுத்து கொண்டு உள்ளது.

விமானத்தில் சென்றால்

விமானத்தில் சென்றால்

விமானத்தில் செல்லும் போது சைதாப்பேட்டை பகுதியை பார்த்தால் அடர்ந்த காட்டுக்குள் ஒரு ஊர் இருப்பது போல காட்சி தரும். முதல்வர் துவங்கிய பசுமை தமிழகம் திட்டம் மூலம் அது சாத்தியம் ஆகிற்று. மழை நீர் வடிகால் திட்ட பணிகள் சென்று கொண்டு உள்ளது. வெகு விரைவில் சென்னை பகுதி முழுவதும் மழை நீர் தேங்காத பகுதியாக மாறும் என்றார்.

அமைச்சர் கே.என். நேரு

அமைச்சர் கே.என். நேரு

இதையடுத்து அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் முதல்வரிடம் நல்ல பெயரை பெற்றுள்ளார். நாங்கள் முதல்வரிடம் நிகழ்ச்சிக்கு நேரம் கேட்டால், பதில் கிடைக்க 2 நாட்கள் தாமதமாகும். ஆனால் மா.சுப்ரமணியன் கேட்டால் உடனடியாக கிடைக்கும்.

கழுத்தில் கத்தி வைத்த கும்பல்

கழுத்தில் கத்தி வைத்த கும்பல்

1990 களில் இதே தொகுதியில் நான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த பொழுது என் கழுத்தில் கத்தி வைத்தனர். அப்போது அங்கிருந்த சென்னை மாநகர கமிஷனர் விஜயகுமார் அதை கண்டும் காணாமல் சென்றார். ஆனால் தற்பொழுது அதே இடத்தில் மா.சுப்ரமணியன் பணியாற்றுவது சந்தோஷமாக உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+