வெண்டிலேட்டரில் அமைச்சர் காமராஜ்... மருத்துவமனைக்கு விரைந்த ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ்..!
சென்னை: கொரோனா காரணமாக கடந்த 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Recommended Video

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார்.

இதனிடையே அமைச்சர் காமராஜ் உடல்நிலை குறித்து கேட்டறிவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகியோர் இரவு 10 மணியளவில் எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு காமராஜின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இது அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்பத்தில் மூச்சுவிடுவதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்த அமைச்சர் காமராஜுக்கு திடீரென சுவாசப்பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரது உடல்நிலை சற்று பின்னடைவை சந்தித்ததால் அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது.
இதன் காரணமாக இப்போது அவருக்கு எக்மோ உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்படவுள்ளன. இன்று மாலை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு காமராஜ் மாற்றப்பட்டார்.
அமைச்சர்கள் தங்கமணி, கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, நிலோபர் கபில் போன்றோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் காமராஜுக்கு தீவிர சிகிச்சை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அவரது குடும்ப உறுப்பினர்கள் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications