8.30 மணி வரை தான் டைம்! திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கெடு விதித்த அமைச்சர் கேஎன்.நேரு!
சென்னை: நாமக்கல்லில் ஜூலை 3-ஆம் தேதி நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் காலை 8.30 மணிக்கு முன்னரே அவரவர் இருக்கைகளில் அமர வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏனெனில் முதலமைச்சர் ஸ்டாலின் மிகச் சரியாக காலை 9 மணிக்கு எல்லாம் மாநாடு மேடைக்கு வந்துவிடுவார் என நேரு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

நாமக்கல் மாநாடு
''கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான - தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 3.7.2022 ஞாயிறு அன்று காலை 9.30 மணிக்கு நாமக்கல், தேசிய நெடுஞ்சாலை, பொம்மகுட்டையில் "நகர்ப்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு" நடைபெறுகிறது.''

8.30 மணிக்கு முன்னர்
அதில் கலந்து கொள்ளவிருக்கும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் - மாநில அமைச்சர்கள் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தலைமைக் கழக நிர்வாகிகள் மாநகராட்சி மேயர்கள், துணைமேயர்கள் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் நகர்ப்புற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என அழைப்பு வரப்பெற்றவர்கள் அனைவரும் மாநாட்டு பந்தலில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் காலை 8.30 மணிக்கு முன்னரே வந்து அமர்ந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.''

9 மணிக்கு வருவார்
''ஏனெனில், கழகத் தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் சரியாக 9.00 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வந்துவிடுவார் என்கின்ற காரணத்தால், மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அனைவரும் காலை 8.30 மணிக்கு முன்னரே மாநாட்டுப் பந்தலில் வந்த அமர்ந்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் நிகழ்ச்சி
ஜூலை 4-ஆம் தேதி சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு உள்ளதால் 3-ஆம் தேதி மாலையே நாமக்கல் மாவட்ட நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு முதல்வர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் தான் முன் கூட்டியே மாநாட்டிற்கு சென்றுவிட்டு அங்கிருந்து விரைவாக புறப்படும் வகையில் முதல்வரின் பயண நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications