என்னை பார்க்க யாரும் வரவேண்டாம்.. அமைச்சர் KN நேரு போட்ட ‘ஸ்ட்ரிக்ட்’ உத்தரவால் உடன்பிறப்புகள் ஷாக்!
சென்னை: தனக்குப் பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லத் திமுக தொண்டர்கள் யாரும் நேரில் வர வேண்டாம் என்றும், பிறந்தநாள் நிகழ்ச்சிகள் எதையும் நடத்த வேண்டாம் என்றும் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என்.நேரு கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேருவின் பிறந்தநாள் நாளை மறுநாள் (நவம்பர் 9) வருகிறது. திருச்சி மாவட்ட திமுகவினர், அமைச்சரும், திமுகவின் முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். இந்நிலையில், கட்சியினருக்கு ஒரு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்டுள்ளார் கே.என்.நேரு.

"எனது பிறந்தநாளான வருகின்ற நவம்பர் 9ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நான் ஊரில் இல்லை. அன்றைய தினம் எனது பிறந்தநாளை ஒட்டி என் மேல் அன்பு கொண்ட நல்ல உள்ளங்களும், நண்பர்களும், கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திருச்சிக்கோ, சென்னைக்கோ நேரில் வந்து எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டாம்.
மேலும், அன்றைய தினம் எனது பிறந்தநாள் விழா என்ற பெயரில் எவ்வித நிகழ்ச்சிகளையும் தயவு செய்து யாரும் நடத்திட வேண்டாம் என்றும், கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு.
— K.N.NEHRU (@KN_NEHRU) November 6, 2023
தனது பிறந்தநாளையொட்டி, தன்னை நேரில் சந்திக்க யாரும் வர வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளுக்கு எந்த நிகழ்ச்சியையும் நடத்த வேண்டாம் என்றும் அமைச்சர் கே.என்.நேரு அறிவுறுத்தி இருப்பது அவரது ஆதரவாளர்களையும், திருச்சி திமுகவினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அண்மையில் சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டுக்கான பந்தல் அமைக்கும் பணியை ஆய்வு செய்த கே.என்.நேரு, அதில் ஏற்பட்ட குளறுபடி குறித்து ஒப்பந்ததாரரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது ஒப்பந்ததாரர் விளக்கம் அளிக்கும் போது, டென்ஷன் ஆன அமைச்சர் கே.என்.நேரு, கெட்ட வார்த்தையில் திட்டினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், கடும் அப்செட்டில் இருக்கும் கே.என்.நேருவை, திமுக தலைமையும் அழைத்து, இதுகுறித்து கண்டித்ததாக கூறப்படுகிறது. கள வீரர் என முதல்வர் ஸ்டாலினால் பெருமையாக புகழப்படும் கே.என்.நேரு, இந்த விஷயத்தால் மேலும் அப்செட்டாகி உள்ளதாக தெரிகிறது. பிறந்தநாள் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம், தன்னை சந்திக்க வேண்டாம் என அவர் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்!











Click it and Unblock the Notifications