"மங்கி பாக்ஸ் வராது என சொல்லவில்லை! முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம்!" விளக்கும் மா.சு
சென்னை: மங்கி பாக்ஸ் பாதிப்பு உலகெங்கும் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்காவில் எண்டமிக் நோயாக இருந்த மங்கி பாக்ஸ் இப்போது, அதற்கு வெளியே பரவ தொடங்கி உள்ளது. குறிப்பாக ஐரோப்பாவில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்தியாவிலும் கூட சிலருக்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. கேரளாவிலும், டெல்லியிலும் இதுவரை மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.

மங்கி பாக்ஸ்
மேலும், சிலர் மங்கி பாக்ஸ் அறிகுறிகள் உடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சூழலில் மங்கி பாக்ஸ் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமை தொடங்கி வைத்தார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன்
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கேன்சர் பாதிப்பிற்குச் சிகிச்சை அளிக்க பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில மாதங்களில் புற்றுநோய் மையம் அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவடையும். ஓராண்டிற்குள் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் திறக்கப்படும். புற்றுநோய்க்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

வராது என நாங்கள் சொல்லவில்லை
தமிழ்நாட்டில் இதுவரை யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்து வருகிறோம். மங்கி பாக்ஸ் இல்லவே இல்லை என்றோ தமிழ்நாட்டிற்கு வரவே வராது என்றோ நாங்கள் சொல்லவில்லை. இதுவரை சுமார் 77 நாடுகளில் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நாடுகளில் இருந்து விமானங்கள் மூலம் தமிழ்நாட்டிற்கு வருவோரைக் கண்காணித்து வருகிறோம். தமிழ்நாட்டில் இருக்கும் சர்வதேச விமான நிலையங்களில் இரண்டு முறை ஆய்வுகளையும் நடத்தி உள்ளோம்.

விமான நிலையங்கள்
இந்த 77 நாடுகள் மட்டுமின்றி, அனைத்து நாடுகளில் இருந்து வருவோரையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர்களின் வெப்ப நிலையைத் தொடர்ந்து சோதிக்கிறோம். மேலும், முகம் மற்றும் முழங்கைக்கு கீழேயும் கொப்புளங்கள் இருக்கிறதா என்பதைச் சோதனை செய்து வருகிறோம். அப்படி பயணிகளுக்கு அறிகுறிகள் இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள். இதற்காகச் சர்வதேச விமான நிலையங்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை மாவட்டங்களில் இருக்கும் அரசு மருத்துவமனைகளில் 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

சோதனை
தனிமைப்படுத்தப்பட்ட பின்னர், அவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்படும். அந்த மாதிரிகளை முன்பு டெஸ்டிங் செய்ய புனே தான் அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது சென்னையிலேயே ஆய்வு மையத்தையும் தொடங்கி உள்ளோம். இங்கு உறுதியானால் மீண்டும் உறுதி செய்ய ஐசிஎம்ஆருக்கு அனுப்பப்படும். அவர்கள் உறுதி செய்த உடன் நாங்கள் அறிவிப்போம்.

போலி தகவல்
இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. கடந்த மாதம் இருவருக்குக் குரங்கு அம்மை போன்ற கொப்புளங்கள் இருந்ததால், மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பினோம். அதில் குரங்கு அம்மை இல்லை என்பது உறுதியானது. இப்போது வரை யாருக்கும் மங்கி பாக்ஸ் கண்டறியப்படவில்லை. ஆனால், இரு நாட்களாகத் திருச்சி, நாகர்கோவிலில் சிலருக்கு மங்கி பாக்ஸ் உள்ளதாகத் தவறான தகவல்கள் பரவி வருகிறது.

நாங்களே சொல்வோம்
இதுவரை தமிழ்நாட்டில் யாருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு கண்டறியப்படவில்லை. யாருக்காவது மங்கி பாக்ஸ் உறுதியானால் நாங்களே அறிவிப்போம். இதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரம் மங்கி பாக்ஸ் குறித்து பொதுமக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. மங்கி பாக்ஸ் பாதிப்பு ஏற்பட்டால் நிலைமையைக் கையாளவும் சுகாதாரத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர்" என்றார்.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications