என் மகனை கருணை கொலை பண்ணிடுங்க.. கதறிய தாய்.. எம்எல்ஏ ஹாஸ்டலில் தங்க வைத்து.. உயிரை காத்த அமைச்சர்
இவர்கள் வீட்டில் கேஸ் அடுப்பு இல்லை. விறகு அடுப்புதான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
சென்னை: தனது மகனை கருணை கொலை செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் சமீபத்தில் புகார் கொடுத்திருந்தார். அதே மகனுக்கு தற்போது தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளித்து அவரின் உயிரை காப்பாற்றி உள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், வள்ளுவர்புரத்தை சேர்ந்த தம்பதிகள் சரவணன் - சத்யஜோதி. இவர்களுக்கு 12 வயதிலும் 15 வயதிலும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர்கள் வறுமையான குடும்ப பின்னணியை கொண்டவர்கள். இரண்டு மகன்களும் அரசு உதவி பெறும் பள்ளியில்தான் படிக்கிறார்கள்.

அடுப்பு
இவர்கள் வீட்டில் கேஸ் அடுப்பு இல்லை. விறகு அடுப்புதான் இப்போதும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இவர்கள் இருவரும் கையில் சானிடைசரை பூசி விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அருகில் இருந்த விறகு அடுப்பில் இளைய சிறுவன் விழுந்து உள்ளார். இதில் அவரின் கை தீ பற்றி உள்ளது. அதோடு உடலின் ஒரு பக்கம் அப்படியே தீ பிடித்து உள்ளது.உடலின் ஒரு பக்கம் அப்படியே பலத்த காயம் அடைந்து உள்ளது.

தீ காயம்
இந்த தீ காயம் மிகவும் மோசமாக இருந்ததாலும், ஆழமாக இருந்ததாலும் அவருக்கு காயம் ஆறாமல் இருந்துள்ளது. ஒரு காயம் ஆறினால் அதே இடத்தில் மீண்டும் புண் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், சென்னை என்று பல மாவட்டங்களுக்கு சிறுவனை பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். பல இடங்களுக்கு அழைத்து சென்றும், அங்கே தனியார், அரசு மருத்துவமனைகளில் காட்டியும் பலன் இல்லை. காயம் லேசாக மாறினாலும், மீண்டும் அதே இடத்தில் பெரிய காயம் ஏற்பட்டு இருக்கிறது.

நடக்க முடியவில்லை
உடலில் ஒரு பக்கம் காயம் அடைந்ததால் அவரால் உடை உடுத்த முடியவில்லை. அதேபோல் குளிக்க முடியவில்லை. சமயங்களில் சரியாக நடக்கவும் முடியவில்லை. இதனால் அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார். இவரை மருத்துவமனையில் காட்டி காட்டி அவரின் குடும்பமும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவ செலவிற்கு போதிய பணமின்றி அவர்கள் கஷ்டப்பட தொடங்கி உள்ளனர். இதையடுத்து சிறுவனின் பெற்றோர், சிறுவனை கருணை கொலை செய்ய வேண்டும் என்று கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதவி
என் மகனால் இனி இயல்பாக வாழ முடியாது. எங்களுக்கும் சிகிச்சை அளிக்க பணமில்லை. அதனால் கருணை கொலை செய்துவிடுங்கள் என்று மனு கொடுத்துள்ளார். இந்த விஷயம் தெரிந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அந்த அந்த சிறுவனை ஒரு வருடம் சட்டமன்ற விடுதியில் தங்க வைத்து , சென்னையில் சிறப்பு சிகிச்சை பெற வைத்து உள்ளார். அரசு மருத்துவர்கள் பலரின் நேரடி கண்காணிப்பில் அந்த சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிகிச்சையின் பலனாக அந்த சிறுவன் குணமடைந்து உள்ளார். இவரின் காயங்கள் எல்லாம் குணமடைந்து அவர் நேற்று வீட்டிற்கு திரும்பினார். கருணை கொலை செய்ய வேண்டும் என்று பெற்றோரே கூறிய நிலையில் அரசு மருத்துவர்கள் தங்கள் சிகிச்சையின் மூலம் அந்த சிறுவனின் பிஞ்சு உயிரை காப்பாற்றி உள்ளனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications