கொரோனா 4வது அலை வரலாம்.. 100 % தடுப்பூசி கட்டாயம் மக்களே.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தல்..!
சென்னை : உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் கொரோனா 4வது அலை வரலாம் எனவும், எனவே 100 % மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் அறிவுறுத்தியுள்ளார்.
Recommended Video
கொரோனா 3வது அலை தொடங்கிய நிலையில் கடந்த ஜனவரி மாதத்தில் தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் 2வது அலையைப் போல மரணங்கள் பதிவாகவில்லை.. காரணம் மேம்படுத்தப்பட்ட சுகாதார கட்டமைப்புகள் தடுப்பூசி திட்டங்கள் காரணமாக இறப்பு எண்ணிக்கை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
இந்நிலையில் ஜூன் மாதத்தில் கொரோனா 4வது அலை வரலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஜூன் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா 4வது அலை வரலாம் எனவும், எனவே 100 % மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

கொரோனா தடுப்பூசி முகாம்
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு முழுவதும் இன்று 2வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் 50,61,287 பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.34 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர். செங்கல்பட்டு, கோவை, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 100% பேருக்கு முதல் தவணை தடுப்பூசியை செலுத்தி சாதனை புரிந்துள்ளது.

சென்னை சாதனை
99% முதல் தவணை தடுப்பூசிகள் போடப்பட்டு, மாநகராட்சிகளில் முதன்மையானதாக சென்னை மாநகராட்சி விளங்குகிறது. அதாவது, சென்னையில் இதுவரை 99% பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர் மற்றும் 81% பேர் 2வது தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.தமிழகத்தில் 100% இலக்கை நோக்கி தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கொரோனா 4வது அலை
உலகளவில் கொரோனா விலகவில்லை, அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதோடு ஆசியா, ஐரோப்பியா, சிங்கப்பூர், ரஷ்யா போன்ற நாடுகளில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கான்பூர் ஐஐடி போன்ற நிறுவனங்களும் பல்வேறு மருத்துவ வல்லுனர்களும் வரும் ஜுன் மாதத்திலிருந்து கொரோனா நான்காம் அலை வரவாய்ப்புள்ளதாக தெரிவித்திருப்பதால் தமிழகத்தில் 100 சதவிகிதம் மக்களுக்கு தடுப்பூசி போடும் நோக்கில் தீவிரமாக சிறப்பு முகாம்கள் நடத்தபடும் " என்றார்.












Click it and Unblock the Notifications