தமிழகத்தில் 57 லட்சம் பேர் 2-ஆம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதது வருத்தம்.. மா.சு
சென்னை: தமிழகத்தில் இதுவரை 57 லட்சம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதது வருத்தமளிப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அவர் கிண்டியில் மாநகராட்சி சார்பில் கட்சியுள்ள நவீன உடற்பயிற்சி கூடத்தை திறந்துவைத்து அங்கிருந்த சாதனங்களில் மிகவும் ஆர்வமுடன் உடற்பயிற்சி செய்தார்.
இதற்கடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிப்பதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தி வருகிறோம்.

முகக் கவசம்
பொதுமக்கள் தங்கள் உயிர்களைக் காப்பதற்கு முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். இதற்கு எந்த ஒரு நாடும் விதிவிலக்கே இல்லை. இங்கிலாந்தில் நேற்றைய தினம் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதியானது. சிங்கப்பூரில் குறைந்த பிறகு கூடிக் கொண்டே செல்கிறது. இப்படியிருக்கும் நிலையில் மக்கள் கொரோனா விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

முகக் கவசம்
முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது , சானிடைசர் பயன்படுத்துவது சோப்பு போட்டு கைகளை நன்றாகக் கழுவுவது போன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். தமிழகத்தில் இதுவரை 68 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசியையும் 25 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டனர்.

18 வயதை தாண்டியவர்கள்
இது போதுமானதல்ல. 18 வயதை தாண்டிய அனைவரும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். இரண்டாவது தவணை தடுப்பூசி போட வேண்டியவர்கள் 5.70 கோடி பேர் உள்ளனர். இன்னமும் 57 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். வரும் சனிக்கிழமை நடைபெறும் 6ஆவது மெகா தடுப்பூசி முகாமை மக்கள் பயன்படுத்தி இரண்டாவது தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும்.

கோவாக்சின்
பொதுமக்களின் வசதிக்காக வரும் சனிக்கிழமை கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. எனவே இந்த முகாம்களில் தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில்தான் தடுப்பூசி முகாம் நடைபெறும். ஆனால் ஞாயிற்றுக்கிழமைகளில் மதுப்பிரியர்களும் அசைவ பிரியர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குகிறார்கள். இதனால் இந்த முகாம் சனிக்கிழமை மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications