மனோ தங்கராஜ் சொன்ன வார்த்தை.. கோபமாக கண்டித்த சபாநாயகர் அப்பாவு.. சட்டென மாறிய அமைச்சரின் முகம்!
சென்னை: நேற்று சட்டசபையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது குறுக்கிட்டு அவரைக் கண்டித்தார் சபாநாயகர் அப்பாவு. இதனால், சட்டென அமைச்சர் மனோ தங்கராஜின் முகமே மாறிப்போனது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 20 ஆம் தேதி தொடங்கியது. துறை வாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நேற்று பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று புதிய அறிவிப்புகளை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டார்.

அமைச்சர் பேசும்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு: முன்னதாக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது, மத்தியில் ஆளும் பாஜகவை விமர்சிக்கும் வகையில் பேச்சைத் தொடங்கினார். அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகளை பாஜக கையில் எடுத்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தியதாகவும், வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்டதாகவும் விமர்சித்தார்.
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசிக்கொண்டு இருக்கும்போதே குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "வெளியே மேடையில் பேசுவது மாதிரி இங்கு பேசுவது நாகரீகமல்ல. சபைக்கு என ஒரு நாகரீகம் உள்ளது. அதன்படி தான் நடந்துகொள்ள வேண்டும். இவ்வளவு மூத்த அமைச்சர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள். சப்ஜெக்ட்டை தாண்டவில்லை. தயவுசெய்து அதை மனதில் வைத்து பேசுங்கள்." என கண்டித்தார்.
பேச விடுங்க: அதற்கு மனோ தங்கராஜ், "பேரவைத் தலைவரே.. நாம் அரசியல் கட்சி. கொஞ்சம் அரசியல் பேசித்தான் ஆகவேண்டும். இவ்வளவு நெருக்கடியான தேர்தல் முடிந்து நிற்கிறோம். நீங்கள் கொடுத்திருக்கும் நேரத்திற்குள் முடித்து விடுவேன். தயவு செய்து என்னை பேச அனுமதியுங்கள்" எனக் கேட்டுக்கொண்டார்.
ஆனால், சபாநாயகர் அப்பாவு, "பால்வளத்துறை தொடர்பான விவாதத்தில் அதைப் பற்றி பேச வேண்டும். வீண் பிரச்சனை தேவையில்லை. எல்லோருக்கும் உங்களை விட நிறைய பேசுவதற்கு இருக்கிறது. என்ன பேசுவது என்பதற்கு இந்த சபையில் ஒரு நாகரீகம் உள்ளது. அதை மட்டும் பேசுங்கள்" என மீண்டும் வலியுறுத்தினார் அப்பாவு.
சுண்டிப்போன அமைச்சரின் முகம்: மேலும், "நீங்கள் இப்படி பேசுவதை எல்லாம் அவைக்குறிப்பில் இருந்து நீக்கத்தான் போகிறேன். பால்வளத்துறை பற்றி பேசுவதற்கு வாருங்கள்" எனக் கூறினார் சபாநாயகர் அப்பாவு. இதனால், அமைச்சர் மனோ தங்கராஜின் முகம் சட்டென மாறி சுண்டிப் போனது.
பின்னர் பால்வளத்துறை தொடர்பாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். தற்போது 18 லட்சம் லிட்டர் பால் கூடுதலாக கொள்முதல் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், விரைவில் 66 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து கையாளப்படும் எனவும் உறுதியளித்தார்.
அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள்: கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் உறுதியளித்தார். மேலும், பால் பண்ணை தொழிலில் தொழில் முனைவோராக விரும்பும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் முதல் முறை தொழில் தொடங்குவோர் ஆகியோருக்கு தேவைப்படும் தகுந்த தொழிற்பயிற்சி, ஆதார நிதி உதவி, வழங்கிட பால் பண்ணை தொழில் வளர்ச்சி மையங்கள் தமிழ்நாட்டில் இரு இடங்களில் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
மேலும் 2024-25 ஆம் ஆண்டில் புதிதாக பதிவு செய்யப்படும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் கேன்கள், பால் அளவை உபகரணங்கள், பதிவேடுகள் மற்றும் பாப் பரிசோதனை கருவிகள் வழங்கப்படும் எனவும் பசுந்தீவன பற்றாக்குறையை கருத்தில் கொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு 1 கோடி செலவில் பசுந்தீவன புல் கரணைகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் உத்திரவாதம் அளித்துள்ளார்.
பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகளுக்கு தேவையான ஊட்டசத்து டானிக் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் நியாயமான விலையில் விற்பனை செய்யப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவித்துள்ளார்.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications