"விவசாயம் பற்றி தெரியாமல் அறிக்கை விடுகிறார்".. விஜய் மீது அமைச்சர் MRK பன்னீர்செல்வம் தாக்கு!
சென்னை: விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர் என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். நெல் கொள்முதல் தொடர்பாக தவெக தலைவர் விஜய் திமுக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் அதனை அமைச்சர் விமர்சித்துள்ளார்.
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடலூரில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறுகையில், "கடலூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்துவிட்டது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இன்னும் சில நாட்களில் அறுவடை முடிந்துவிடும். கனமழையால் நெல்மணிகளும், விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் தமிழக அரசும், முதலமைச்சரும் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

விவசாயத்தையும், விவசாயிகளையும் பற்றி தெரியாத புதிய கட்சி தலைவர்கள், அது குறித்து அறிக்கை விட்டு வருகின்றனர். அவர்கள், பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறுகின்றனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூட்டணியில் சீட் பெறுவதற்காக திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்.
தற்போது அறிக்கை விடும் தவெக தலைவர் விஜய், கொரோனா காலத்தில் எங்கு இருந்தார்? கொரோனா காலத்தில் தி.மு.கவினர் வீடு வீடாகச் சென்று காய்கறி, மளிகைப் பொருட்கள் வழங்கினர். கஷ்டம் வரும்போது யார் உதவி செய்கிறார்களோ அவர்களை தான் மக்கள் அடையாளம் காண்பார்கள்.
விவசாயிகளும், விவசாயமும் தற்போது பேசுபொருள் ஆகிவிட்டது. அந்த அளவுக்கு விவசாயத்திற்கான விழிப்புணர்வை தமிழக முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ளார்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு, ஒரு மாத காலமாக எந்தவித அரசியல் நகர்வுகளிலும் ஈடுபடாமல் இருந்த விஜய், அண்மையில் நெல் கொள்முதல் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டார். விஜய் வெளியிட்ட அறிக்கையில், "தொடர் மழையால், விவசாயிகளின் கடின உழைப்பால் விளைவிக்கப்பட்ட நெல்மணிகள் முதல்முறை வீணான போதே துரிதமாகச் செயல்பட்டு மீதமுள்ள நெல்மணிகளைப் தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா?
விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும். மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது?
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்று, பணத்தைக் கையில் பார்த்துவிடாமல் தடுப்பதே ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் நோக்கமாக இருந்து வருகிறதா என்கிற ஐயம் ஏற்படுகிறது. இது இந்த ஆண்டு மட்டுமில்லை. ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை என்கிறபோது வேதனையாகவும் உள்ளது. வெற்று விளம்பரத்திற்காக நானும் டெல்டாக்காரன்தான் எனப் பெருமை பேசிவருகிறது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள் இந்த வெற்று விளம்பர திமுக அரசின் அலட்சியத்தால் மழையில் நனைந்து வீணாகி, மூட்டையிலேயே முளைத்துள்ளன. அதைப் போல், தமிழ் நாட்டு மக்கள் மனங்களில் முளைத்து வளர்ந்து செழித்து நிற்கும் அரசு மீதான எதிர்ப்பு இன்னும் வலுவாகி, வெகுஜன மக்கள் விரோத திமுக ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி" எனத் தெரிவித்திருந்தார்.
-
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம்












Click it and Unblock the Notifications