விவசாயம் பற்றி அமெரிக்காவின் முதல் அதிபர் ஜார்ஜ் என்ன சொன்னார் தெரியுமா? -MRK பன்னீர்செல்வம்
சென்னை: தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் விவசாயம் பற்றி சொன்ன தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டார். அதன் விவரம் வருமாறு;
''அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன், "மனிதன் ஆற்றக்கூடிய தொழில்களிலேயே மிகவும் நலமிக்கதும், பயனுள்ளதும்,உன்னதமானதுமான தொழில் வேளாண்மையாகும்" (Agriculture is the most healthful, most useful and most noble employment of man) என்று வழிமொழிகிறார்.''

''அல்லும் பகலும், அயராது உழைத்து, உலகோரின் அச்சாணியாகத் திகழும் மேன்மையுடைய, வேளாண் பெருங்குடி மக்களைப் போற்றும் விதமாக, வேளாண்மை கடந்துவந்த பாதைகளை இம்மாமன்றத்தில் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.''
''நமது வரலாற்று ஆவணங்களில் விலங்குகளை வேட்டையாடுதல், கால்நடைகளை வளர்த்தல் ஆகியவற்றைக் கற்கால மனிதர்கள் மேற்கொண்டதற்கான தகவல்களோடு "மெய்திரி வகையின் எண்வகை உணவில் செய்தியும் வரையார்" என்று தொல்காப்பியர் கூறியுள்ளதிலிருந்து நெல், புல்லரிசி, காடைக்கண்ணி (சிறுதானியம்), உளுந்து, அவரை போன்றவற்றைப் பயிரிட்டுள்ளதற்கான ஆதாரங்கள், ஆய்வாளர்களின் ஆய்வுக் குறிப்புகளிலிருந்து காணமுடிகின்றது. பின்னர், பட்டறிவாலும், படிப்பறிவாலும்
பயிர் வளர்ப்பு தொடர்பான நுணுக்கங்கள் பெறப்பட்டுள்ளதையும் அறிய முடிகின்றது.''
''மேலும், நம் முன்னோர்கள் பயிர் செய்வதும், உணவு உண்பதும் என்று மேலோட்டமான வாழ்வை வாழாது, ஒவ்வொரு செயலுக்கும் முக்கியத்துவம் அளித்து, ஒவ்வொன்றையும் நுணுகி ஆராய்ந்து, நுட்பமாகக் கண்டறிந்து, தங்களுடைய வேளாண் அறிவை வளர்த்துக்கொண்டிருப்பதை சங்க இலக்கியங்கள் மூலம் மிக எளிதாக நாம் உணரலாம். ''
''உணவு உற்பத்தியின் உன்னதத்தை உலகப் புகழ்பெற்ற பசுமைப்புரட்சி விஞ்ஞானி பாரத ரத்னா எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள், "எதிர்காலம் தானியங்களை அதிகம் கொண்ட நாடுகளுக்கு உரியதே தவிர, துப்பாக்கிகளை அதிகம் கொண்ட நாடுகளுக்கு அல்ல" (The future belongs to nations with grains and not guns) என்று தெரிவித்துள்ளார்.''
''வேளாண் பெருங்குடி மக்கள், தங்களின் உழைப்பிற்கேற்ற பலன்களைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தில், வேளாண்மையை வருமானம் ஈட்டக்கூடிய தொழிலாக மாற்றி, உழவர்களின் நலனைப் பேணிக்காக்க நேசக்கரத்துடன் பல உன்னதத் திட்டங்களை வழங்கி, நடைமுறைப்படுத்தி வருபவர் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்.''
''வேளாண்மைத் துறையை, "வேளாண்மை - உழவர் நலத்துறை" எனப் பெயர் மாற்றம் செய்து, வேளாண் உற்பத்தியுடன் நின்று விடாமல், உழவர் பெருமக்களின் நலனிற்கு முக்கியத்துவம் அளித்தவரும் நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்தான். வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களைச் சாதனைகளாக மாற்றி, அதன் மூலம் விவசாயிகளின் நலனைப் பேணிக் காத்திட, பல அரிய திட்டங்கள் வேளாண்மை-உழவர் நலத்துறையால் கடந்த மூன்று ஆண்டுகளில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ''
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications