டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க! சீரியஸ் பிரஸ்மீட்டில் சிரிப்பலையை உருவாக்கிய அமைச்சர் நேரு!
சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஈகோ யுத்தம் நடப்பது போல் டிபேட் போகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க என தனக்கே உரிய பாணியில் பதிலளித்து சீரியஸ் பிரஸ்மீட்டில் சிரிப்பலையை உருவாக்கிவிட்டார் அமைச்சர் நேரு.
அமைச்சர் கே.என்.நேருவை பொறுத்தவரை எப்பேர்பட்ட எடக்குமடக்கான கேள்விகளையும் எளிதாக எதிர்கொள்ளக்கூடியவர். ஆனால் சாதுர்யமாக பதிலளித்து சர்ச்சைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளக் கூடியவர். நேற்று கூட கோவையில் இந்தியாவின் பெயர் பாரத் என்று மாற்றப்படுவதாக சொல்லப்படுகிறதே என்ற கேள்விக்கு, இதையெல்லாம் பெரியவங்க கிட்ட கேளுங்க எனக் கூறி ஈசியாக நழுவிக் கொண்டார்.

அதேபோல் செய்தியாளர்களிடம் பேசும் போது உரிமையாக பேசி செய்தியாளர்கள் சந்திப்பையே கலகலப்பாக வைத்துக் கொள்வார். அந்த வகையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மழைக்காலம் முடியும் வரை சாலைகளில் எங்குமே பள்ளம் தோண்டக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணியை வேகமாக முடிக்கத் தான் பார்க்கிறோமே தவிர பொய் சொல்லி இழுத்தடிக்க விரும்பவில்லை என்றும் 15ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் அந்தப் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார். மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தங்கள் பேச்சை கேட்பதில்லை என்ற கவுன்சிலர்களின் குற்றச்சாட்டு குறித்து தான் ஆய்வுக்கூட்டம் நடத்தியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும், அதிகாரிகளுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே ஈகோ யுத்தம் நடப்பது போல் டிபேட் போகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, டிபேட் கிபேட்டுன்னு நீங்களா சொல்லாதீங்க என கேள்வியை முடிப்பதற்குள் பதிலளித்து சிக்ஸர் விளாசினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications