யூகங்களுக்கு முற்றுப்புள்ளி! எந்த விரிசலும் இல்லை! சபரீசனுடன் ஒரே நிகழ்வில் ஒன்றாக அமைச்சர் பிடிஆர்
சென்னை: முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் அமைச்சர் பிடிஆர் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டது அவரது எதிர் தரப்பினருக்கு ஷாக்காக அமைந்துள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குறித்த சர்ச்சை ஆடியோவை தொடர்ந்து அவரை முதல்வர் தரப்பு ஒதுக்கி வைத்துவிட்டதாகவும் குறிப்பாக சபரீசன், உதயநிதி ஸ்டாலின் போன்றோர் பேசுவதே இல்லை எனவும் ஒரு தகவல் வட்டமடித்தன. மேலும், முதல்வர் தரப்பிடம் பிடிஆரின் செல்வாக்கு குறைந்துவிட்டதாகவும் கூறப்பட்டன.

இதனை தவிடுபொடியாக்கும் வகையில் சென்னையில் நேற்றைய தினம் ஒரு நிகழ்வு நடந்தது. முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் மறைவைத் தொடர்ந்து அவரது இல்லத்துக்கு சென்று குடும்பத்தினரிடம் துக்கம் விசாரிக்கச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.
அவருடன் ஆ.ராசா, அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், சபரீசன் உள்ளீட்டோரும் உடன் சென்றிருந்தனர். அப்போது சபரீசன் அருகில் தான் அமைச்சர் பிடிஆர் ஒன்றாக கேசுவலாக நின்றுக் கொண்டிருந்தார். இருவரும் எப்போதும் போல் பேசிக்கொள்ளவும் செய்துள்ளனர்.
இதன் மூலம் தங்களுக்குள் எந்த விரிசலும் இல்லை என்பதை அவர்கள் உணர்த்தியுள்ளனர். அமைச்சர் பிடிஆர் சொந்தப்பணிகள் காரணமாக வெளிநாடு சென்றிருந்த நிலையில், கோபித்துக்கொண்டு தான் அவர் வெளிநாடு சென்றுவிட்டதை போல ஒரு தோற்றத்தை உருவாக்க அவரது எதிர்தரப்பினர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே தன்னை பற்றிய யூகங்களுக்கு முற்றுப்புள்ள வைக்கும் வகையில் மீண்டும் தனது துறை சார்ந்த பணிகளில் பரபரப்பாக இயங்க ஆரம்பித்துவிட்டார் அமைச்சர் பிடிஆர். சபரீசனுடன் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை போல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடனும் ஒன்றாக ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications