ராக்கெட்டை போல் உயரத்தில் செல்லும் தக்காளி விலை.. நாளை முக்கிய முடிவு எடுக்க போகும் தமிழக அரசு
சென்னை: ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்வது குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
கோடை காலங்களில் தக்காளியின் விலை வீட்டருகே இருக்கும் கடைகளில் கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை ஆகும். அது போல் மார்க்கெட்டுகளில் ரூ 10 க்கு விற்பனை செய்யப்படும்.

பாக்ஸாக வாங்கினால் ரூ 5 க்கு கூட விற்பனையாகும். ஆனால் தற்போது தக்காளியின் வரத்து அதிகரிப்பால் அதன் விலை ரூ 60 அதிகரித்து, அதிலிருந்து ரூ 100 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியை யாரும் பதுக்கி வைக்கக் கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தக்காளியின் விலை அதிகரித்துள்ள நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தக்காளியை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ 60 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இருப்பினும் தக்காளி மொத்த விலை கிலோ 100 க்கும் சில்லறை விலை 150 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நாளை நடைபெறும் ஆலோசனையில் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் நியாய விலை கடைகளில் தக்காளியை விற்பனை செய்யலாமா என்பது குறித்தும் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என தெரிகிறது.
ஏற்கெனவே சிலிண்டர் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பால், காய்கறிகளின் விலை உயர்வால் ஏழை எளிய நடுத்தர மக்கள் அவதிப்படும் நிலையில் இந்த தக்காளி விலை பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்










Click it and Unblock the Notifications