ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி! எங்கெங்கு முன்னுரிமை? அமைச்சர் பொன்முடி பதில்!
சென்னை: ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
முதலில் கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பிறகு அடுத்தடுத்த இடங்களில் அரசு கலை அறிவியல் கல்லூரிகள் நிறுவப்படும் எனக் கூறியுள்ளார்.
பூந்தமல்லி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்து பேசிய அவர் இதனைக் கூறினார்.

அரசு கல்லூரி
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் புதிதாக அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை அந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வான கிருஷ்ணசாமி முன் வைத்தார். மேலும், தற்போது 3 கல்லூரிகள் இருந்தாலும் பல கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் போக்குவரத்து நெரிசலால் 4 மணி நேரம் பயண நேரம் ஆவதாகவும் தெரிவித்தார்.

அமைச்சர் பொன்முடி
இதற்கு பதிலளித்து பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உங்க தொகுதியில் 3 கல்லூரிகளை வைத்துக்கொண்டு மேலும் புதிதாக ஒரு கல்லூரியை கேட்பது நியாயமா, ஒரு கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் தமிழகத்தில் பல உள்ளன. அதனால் முதலில் கல்லூரி இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக அங்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்கப்படும் எனக் கூறினார்.

உயர்கல்வித்துறை
மேலும், தமிழக முதலமைச்சரை பொறுத்தவரை உயர்கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என விரும்புபவர் என்றும் ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு தொகுதிக்கு ஒரு அரசு கலை அறிவியல் கல்லூரி என்ற அறிவிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

எல்லோருக்கு உரிமை
எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அவரவர் தொகுதியில் கல்லூரி அமைய வேண்டும் என ஆசைப்படுவது இயல்பான ஒன்று எனவும் அதில் தவறேதும் இல்லை எனவும் கூறினார். சபாநாயகரே அவரது தொகுதிக்கு ஒரு அரசு கல்லூரி வேண்டும் என கேட்டிருப்பதாகவும் ஆகையால் முன்னுரிமை அடிப்படையில் தொகுதிகளுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரிகள் கொடுக்கப்படுவதாக அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications