ஆகஸ்ட் 16ல் தொடங்கும் பொறியியல் கலந்தாய்வு - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 16 ஆம் தேதி தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்து உள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், "தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்பிக்கக்கூடிய நடைமுறைகள் குறித்து குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் மாணவர் சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசிக்கப்பட்டது.

எப்போது விண்ணப்பிக்கலாம்?
அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் காலியாவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை வரும் பொறியியல் கலந்தாய்வில் மேற்கொள்ள உள்ளோம். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 19 வரை மாணவர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மற்றும் 110 பாலிடெக்னிக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு தேதி
ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும். அதனை தொடர்ந்து ஆகஸ்டு 8 ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆகஸ்டு 16 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்கி 19 ஆம் தேதி வரை முதல் 4 நாட்கள் மாற்றுத்திறனாளிகள்,
விளையாட்டுப் பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நடைபெற உள்ளது.

எவ்வளவு கட்டணம்?
தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்டு 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10 ஆம் தேதி வரை நடைபெறும். பொறியியல் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அதே கட்டணம் வசூலிக்கப்படும். கலந்தாய்வின் மூலம் கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யக் கூடிய மாணவர்கள் ஒரு வார காலத்திற்குள் கல்லூரிக் கல்வி கட்டணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்தார்

எத்தனை மாணவர்கள்?
முதல் கட்ட கலந்தாய்வில் 15 ஆயிரம் பேரும் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
15 ஆயிரம் பேரும் என மொத்தம் நான்கு கட்டங்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தொடர்ந்து அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் இணையதளம் மூலம் வருகிற இருவத்தி ஏழாம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 25-07-2022 தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தெரிவித்தார்
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications