அட்டெண்டன்ஸ் போட்ட ஆளுநர்..ஆப்சென்ட் ஆன அமைச்சர் பொன்முடி! பெரியார் பல்கலை..பஞ்சாயத்தால் பாலிடிக்ஸ்
சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 44வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் திமுக தலைமையிலான தமிழக அரசுக்கும் ஆரம்பத்தில் இருந்தே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்ட பல மசோதாக்களை ஆளுநர் தற்போது வரை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதால் பல சிக்கல்கள் எழுந்திருக்கிறது.

மேலும் பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் பேசும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதனம், பாரதம், இந்து மதம் குறித்து பேசி வருகிறார். இதனால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
தொடர்ந்து ஆளுநரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அவரை திரும்ப பெற வேண்டும் என கடுமையாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர். மேலும் ஆளுநருக்கு எதிராக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன அறிக்கையும் வெளியிடப்பட்டது. அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் தொடர்ந்து ஆளுநரை விமர்சித்து வருகின்றனர்.
மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவ்விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்ற நிலையில் அதோடு ஓய்ந்து போனது. இந்நிலையில் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ஊழல் புகாரில் சிக்கிய பெரியார் பல்கலை., துணைவேந்தர் ஜெகந்நாதனுக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பை அளித்து ஆளுநர் ஆர்.என். உத்தரவிட்டார். இதனால் மீண்டும் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான மோதல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக 44வது பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். உயர்கல்வித்துறையின் எதிர்ப்பை மீறி பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனின் பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில் பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார். அமைச்சர் பொன்முடியைப் போலவே பொன்முடியை உயர் கல்வித் துறை அதிகாரிகளும் புறக்கணித்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு தொடங்கியது முதல் முடியும் வரை தமிழக உயர் கல்வித் துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் பட்டமளிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. இதே போல், அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரான எம்எல்ஏ பரந்தாமனும் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்துள்ளார். நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆளுநர் மாளிகையை சேர்ந்தவர்கள் மட்டுமே பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ஊழல் புகாருக்குள்ளான பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகந்நாதனின் பதவியை ஆளுநர் தன்னிச்சையாக ஆளுநர் நீட்டித்தது, ஏற்கனவே இருந்த கருத்து மோதல்களின் தொடர்ச்சியாகவும், ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பட்டமளிப்பு விழா உயர் கல்வித்துறை அமைச்சர்களும், அதிகாரிகளும் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், சைதாப்பேட்டை திறந்த நிலை பல்கலைக்கழகம், சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications