பொன்முடி மகிழ்ச்சியாக இருக்கார்.. காரணம்.. பிரஸ் மீட்டில் போட்டு உடைத்த டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: அமலாகக்த்துறை விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் அமைச்சர் பொன்முடியை இன்று அவரது இல்லத்தில் சென்று சந்தித்த பிறகு டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பொன்முடிக்கு அச்சம் இல்லை என்றும் அவர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் டிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் நேற்று விடிய விடிய அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இன்று மாலை மீண்டும் விசாரணைக்கு வருமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை என்று திமுக விமர்சித்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு இருக்கும் பொன்முடியை மூத்த அமைச்சர்கள் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

திமுகவின் உயர் மட்ட நிர்வாகிகளும் பொன்முடியை சந்தித்து பேசினர். அந்த வகையில் திமுகவின் டிகேஎஸ் இளங்கோவனும் பொன்முடியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:- பாஜக தனது கூட்டணியில் 37-வது கட்சியாக அமலாகக்துறையையும் சேர்த்து வெற்றி பெறலாம் என்று எண்ணத்தில் இதை செய்கிறார்கள்.
பொன்முடிக்கு எதிராக அமலாக்கத்துறையின் நடவடிக்கை முற்றிலும் பழிவாங்கும் நடவடிக்கை. எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பார்த்து பாஜக எந்த அளவுக்கு அச்சப்படுகிறது என்பதை இது காட்டுகிறது. பொன்முடி நன்றாக இருக்கிறார். அமலாகக்துறை விசாரணை குறித்து சிறிதும் கவலைப்படவில்லை. காரணம் அவருக்கு தெரியும்.. பொன்முடி அச்சத்தில் இல்லை.

மகிழ்ச்சியாக இருக்கிறார். விசாரணைக்கு ஆஜராக பொன்முடி தயராக இருக்கிறார். பொன்முடி மடியில் கனம் இல்லை அதனால் அவருக்கு வழியில் பயம் இல்லை. அமலாக்கத்துறை அடுத்தகட்டமாக எந்த தவறான முடிவை மேற்கொள்கிறார்கள் என்பதை பொறுத்துதான் மற்றவை (நீதிமன்றம் செல்வது) குறித்து முடிவு எடுக்க முடியும். உலகத்திலேயெ மிகப்பெரிய ஊழல் கட்சி பாஜகதான்.
ஊழலில் மிக உயரத்தை பாஜக தொட்டு விட்டது. களங்கம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக திட்டமிட்டு இதுபோல எதிர்க்கட்சிகளை பழிவாங்குகிறது. செந்தில் பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை கைது செய்யலாமா வேண்டாமா என்று கேள்விக்குதான் நீதிமன்றம் பதில் சொல்லியிருக்கிறது. செந்தில் பாலாஜி மீது தவறு இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் சொல்லவில்லை. எனவே அது வேறு இது வேறு... இவ்வாறு அவர் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications