எங்க ஊர்க்காரர்தான்! கலைஞர் நூற்றாண்டு விழாவில் விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்த அமைச்சர் பொன்முடி
சென்னை: நிலவின் தென் துருவ பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் மற்றும், பிரக்யான் ரோவர் ஆகியவை வெற்றிகரமாக தரையிறங்கி வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி, இந்த வெற்றிக்கு சொந்தக்காரர் எங்க ஊர்க்காரர்தான் என்று விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
விண்வெளி அறிவியலின் முன்னோடியாக இருந்த ரஷ்யாவே நிலவின் தென் துருவ பகுதியில் விண்கலத்தை தரையிறக்குவதில் தோல்வியடைந்த நிலையில், இந்தியா இதனை வெற்றிகரமாக சாதித்து காட்டியிருக்கிறது. இந்த வெற்றியை நாட்டு மக்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய அமைச்சர் பொன்முடி இந்த வெற்றிக்கு காரணமாக இருந்த இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேலை புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் 'கலைஞர் நூற்றாண்டு' விழா கடந்த ஜூன் மாதம் 3ம் தேதி தொடங்கி தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முழுவதும் இந்த நூற்றாண்டு விழா கொண்டாட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த விழா அவரை பெருமைப்படுத்தும் விழாவாக மட்டும் சுருங்கிவிடாமல், அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனிற்காக அறிவித்து, நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், அனைத்துத் தரப்பினரும் பங்கெடுக்கும் வகையிலும் விழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விழுப்புரத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அமைச்சர் பொன்முடியின் பேச்சு பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. அவர் பேசியதாவது, "இன்னைக்கு நடக்குற செஸ் போட்டியில ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு இந்தியர் ஃபைனல் வரை வந்திருக்காரு. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் வந்த பிறகுதான் தமிழ்நாட்டில் விளையாட்டு என்றால் என்ன என்று தெரியும் அளவுக்கு அந்த துறை வளர்ந்திருக்கிறது.
இந்த வளர்ச்சி சிந்தனை கலைஞர், தளபதி அவருக்கு அடுத்து உதயா என வாழையடி வாழையாக வந்திருக்கிறது. உதயா எல்லோருக்கும் வாய்ப்புகளை சமமாக உருவாக்கி இந்த விளையாட்டுகளை வளர்த்துக்கொண்டிருக்கிறார். இதனால் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ளும் அளவுக்கு ஒருவர் வளர்ந்திருக்கிறார். இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை, திராவிட இயக்கத்திற்கு கிடைத்த பெருமை. திராவிட கொள்கையும் இதான்.
கலைஞரின் நூற்றாண்டு விழாவில் நமக்கெல்லாம் பெரிய பெருமை கிடைத்திருக்கிறது. சாதித்து காட்டிய சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக இருப்பவர் எங்க ஊர்க்காரர், விழுப்புரத்துக்காரர், தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்று சொல்லுவதில் எனக்கு பெருமை. கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த நாளிலே தமிழகத்தை சேர்ந்த ஒருவர், சந்திரயானை இயக்கும் திட்டத்தின் தலைவராக உருவாகி இருக்கிறார் என்று சொன்னால் அதுதான் நமக்கு பெருமை.
அவரது தந்தை ரயில்வேயில் பணியாற்றி தொமுச என்று சொல்லக்கூடிய தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் திருச்சி மண்டல பொறுப்பாளராக பொறுப்பேற்றிருந்தவர், கழகத்தையும் சார்ந்தவர் என்பது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும் பெருமை" என்று பேசியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications