Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மும்மொழி சர்ச்சை: ஓபன் சவால் விடுகிறேன்.. பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு பிடிஆர் சேலன்ஞ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மும்மொழிக்கொள்கை விஷயம் தொடர்பான பேட்டியின்போது, பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கு அமைச்சர் பிடிஆர் விடுத்துள்ள சவால் கவனம் பெற்றிருக்கிறது. மும்மொழியை பின்பற்றும் மாநிலங்களில் ஏதாவது ஒன்று தமிழ்நாட்டை விட சிறந்ததாக இருக்கிறதா? என்று பிடிஆர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்மொழிக்கொள்கையை முன்னிறுத்தும் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தும் மாநிலங்களுக்குதான் கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்றும், தமிழகம் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தாததால் ரூ.2000 கோடி நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார்.

tamil nadu NEP education PTR

இது தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இது பற்றிய தனியார் செய்தி ஊடக விவாதத்தில் தமிழக அமைச்சர் பிடிஆர் நேற்று பங்கேற்றிருந்தார். அதில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேள்விக்கு அவர் காட்டமாக பதிலளித்திருந்தது கவனம் பெற்றிருக்கிறது.

ராஜ்தீப் சர்தேசாய்:

"நாடு முழுவதும் பெரும்பாலும் புதிய கல்விக்கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இருப்பினும் நீங்கள் ஏற்கவில்லை. மற்றொருபுறம் தொகுதி மறுவரையறை பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறீர்கள். இது இரண்டையும் 2026 தேர்தலுக்காக மத்திய அரசுக்கு எதிரான ஆயுதங்களாக பயன்படுத்த திட்டமிட்டிருக்கிறீர்கள் என்று விமர்சனம் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?" என செய்தியாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்பியிருந்தார்.

பிரச்சனையின் தொடக்கம்:

இதற்கு பதிலளித்த பிடிஆர், "தேசிய கல்விக்கொள்கை பிரச்சனையை தொடங்கி வைத்தது நாங்கள் கிடையாது. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்தான். கல்விக்கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதியை ஒதுக்க மாட்டோம் என்று அவர்தான் சொன்னார். இப்பிரச்சனைக்கு தொடக்க புள்ளிவைத்தது அவர்தானே தவிர நாங்கள் கிடையாது.

அதேபோல தொகுதி மறுவரை குறித்து நீண்ட காலமாக அச்சம் எழுந்து வந்தது. 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குகிறது. இது தொடர்பான முன்னெடுப்புகளை வேகப்படுத்த வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. இது காலத்தின் கட்டாயம். எனவேதான் இப்போது இப்பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறோம்" என்று பதிலளித்திருந்தார்.

மத்திய அரசுக்கு எதிரான அரசியல்:

மீண்டும் கேள்வி எழுப்பிய ராஜ்தீப் சர்தேசாய், "கடந்த 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கையில் தமிழ், பஞ்சாபி, இந்தி, ஒடியா உள்ளிட்ட மொழிகளுக்கு முக்கியத்தும் தரப்படும் என்று கல்வியமைச்சர் கூறியிருக்கிறாரே. தமிழை நாங்கள் ஒடுக்கவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறாரே! இருப்பினும் நீங்கள் இதனை வைத்து அரசியல் செய்வதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இதற்கு என்ன விளக்கம் கொடுக்க இருக்கிறீர்கள்?" என்று கேட்டிருந்தார்.

இது முதல்முறையல்ல:

"தேசிய அளவில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் 1968, 1986 அதனை தொடர்ந்து 2020ல் மூன்றாவது முறையாக கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதில் 1968ல் அமல்படுத்தப்பட்ட கல்வி கொள்கையில் மும்மொழி முன்மொழியப்பட்டிருந்தது.

வட மாநிலங்களில் ஆங்கிலம், இந்தியும் உடன் ஏதேனும் ஒரு தென் மாநில மொழியும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தென்மாநிலங்களை பொறுத்த அளவில் அவர்களின் தாய் மொழி+ஆங்கிலம் உடன் இந்தி கற்பிக்கப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது.

இதற்கடுத்து 1986ல் இரண்டாவது முறையாக தேசிய கல்விக்கொள்கை கொண்டுவரப்பட்டபோது மும்மொழிக்கொள்கையை வடமாநிலங்கள்தான் எதிர்த்தன. காரணம் தென் மாநிலங்களின் மொழியை கற்பிக்க எங்களிடம் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர்கள் கைவிரித்தார்கள்" என்று பிடிஆர் பதில் அளித்து பேசிக்கொண்டிருந்த போதே ராஜ்தீப் சர்தேசாய் குறுக்கிட்டார்.

காங்கிரஸ் vs பாஜக

"நீங்கள் சொன்ன 1968, 1986 என இரண்டு முறையும் மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. அது உங்களின் கூட்டணி கட்சி. அப்போது மும்மொழிக்கொள்கையை அவர்கள் கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் இப்போது ஆட்சியிலிருக்கும் பாஜக, இந்தி கட்டாயமில்லை என்று கூறி மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்திருக்கிறது. ஏன் எதிர்க்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.

காட்டமான பதில்:

இந்த கேள்விக்கு சூடான பிடிஆர், "நான் சவால் விடுகிறேன்.. மும்மொழிக்கொள்கையை பின்பற்றும் ஏதாவது ஒரு மாநிலம் தமிழ்நாட்டை விட வளர்ச்சியில் முன்னோக்கி இருக்கிறது என்று உங்களால் காட்ட முடியுமா? நாங்கள் எந்த கூட்டணியில் இருந்தோம் என்பது முக்கியமல்ல. இங்கு 2 மொழியைதான் நாங்கள் சொல்லிக்கொடுப்போம். இதுவே எங்களுக்கு நல்ல பலனை கொடுத்திருக்கிறது" என்று பதலளித்திருக்கிறார்.

இந்த விவாதம் சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. மும்மொழிக்கொள்கை குறித்து மத்திய அரசு விடாப்பிடியாக இருக்கும் நிலையில், அமைச்சர் பிடிஆர் விடுத்த சவால் கவனம் பெற்றிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+