தமிழ்நாட்டின் ஆளுநர் யார்? ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா? கொந்தளித்த அமைச்சர் ரகுபதி!
தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியா? அண்ணாமலையா என்று ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா குறித்து என்னென்ன சந்தேகங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டார் என்பது அண்ணாமலைக்கு எப்படி தெரியும் என்று அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநரால் 4 மாதங்கள் மசோதா கிடப்பில் போடப்பட்டிருந்த காலத்தில் 12 பேர் மரணமடைந்ததாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கான மசோதாவை 4 மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
அதில் மத்திய அரசின் கீழ் வரும் விவகாரத்தில் மாநில அரசு எந்த அடிப்படையில் சட்டம் இயற்றலாம் என்பது உட்பட கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனை ஆன்லைன் ரம்மி சட்ட மசோதா தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அமைச்சர் ரகுபதி பேட்டி
இதனைத் தொடர்ந்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், ஆன்லைன் ரம்மி தடை சட்டம் மீண்டும் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்படும். இந்த தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். நாங்கள் சட்டம் இயற்ற அதிகாரம் உள்ளது என்று சட்டத்தை இயற்றி மீண்டும் அனுப்ப உள்ளோம்.

4 மாதங்களில் 12 பேர் மரணம்
சட்டத்தில் உள்ளதை, திரும்பத் திரும்ப ஒரே கேள்வியைதான் ஆளுநர் கேட்டுள்ளார். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீதிமன்றம் சட்டம் இயற்றும் அதிகாரத்தை எங்களுக்கு கொடுத்துள்ளது. அதன்பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு, அனைத்து தரப்பினரின் கேட்டுதான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஆளுநரிடம் இருந்த காலத்தில் 12 பேர் மரணம் அடைந்துள்ளனர் என்று தெரிவித்தார்.

யார் ஆளுநர்?
தொடர்ந்து ஆளுநர் கேட்ட விளக்கங்களை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என்று அண்ணாமலை விமர்சித்தது பற்றிய கேள்விக்கு, ஆன்லைன் ரம்மி தடை மசோதா விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்ட விளக்கங்களை நான் கொடுத்துள்ளேன். இங்கு ஆளுநர் ஆர்.என்.ரவியா அல்லது அண்ணாமலையா?

ரகுபதி கேள்வி
மசோதா குறித்து ஆளுநர் என்னென்ன விளக்கங்கள் கேட்டார் என்று அண்ணாமலைக்கு எப்படி தெரியும்? அரசின் ரகசியங்களை அண்ணாமலையிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தாரா? என்று கேள்வி எழுப்பினார். அதேபோல் இந்தியா முழுவதும் ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட வேண்டும். நாங்கள் அதற்கு முன்னோட்டமாக தடை செய்கிறோம் என்று தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications