"போதை பொருள் கடத்தல்" ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. அமைச்சர் திட்டவட்டம்
சென்னை: போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக்கிற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அளவில் அணி திரட்டுவதில் வல்லமை கொண்டுள்ள திமுகவை தேர்தல் களத்தில் களங்கப்படுத்தி அரசியல் ஆதாயம் பெற்று விடலாம் என்று பாஜக தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது.

பாஜகவுக்கு துணையாக அதிமுகவும் துதி பாடிக் கொண்டிருக்கிறது. முன்பெல்லாம் என்ன செய்தார்கள் என்றால் வருமான வரித் துறை, சிபிஐ, அமலாக்கத் துறை போன்றவற்றை வைத்து மத்திய அரசின் விசாரணை அமைப்புளை வரிசையாக களமிறக்கிவிட்ட பாஜக அரசு, இன்று தமிழகத்தில் திமுக அரசை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் என்சிபியை (போதை பொருள் தடுப்பு பிரிவு) களத்தில் இறக்கி விட்டிருக்கிறது.
போதை பொருள்: ஆனால் தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றதும் போதை பொருள் தடுப்பில் மேற்கொண்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் பாராட்டியிருக்கிறது. ஆனால் இன்று திமுகவை என்சிபியை வைத்து மிரட்டி பார்க்கலாம் என்று எண்ணி பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக என்சிபியின் துணை இயக்குநர் ஞானேஸ்வர் சிங் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
விசாரணை முழுமை அடையவில்லை: புலன் விசாரணை முழுமை பெறவில்லை. விசாரணை முழுமை அடைந்தால்தான் அவர் பிரஸ் மீட் கொடுக்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னதாகவே திமுகவை அசிங்கப்படுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை வைத்துக் கொண்டு அதன் மூலமாக ஏதாவது அரசியல் ஆதாயம் அடைய முடியுமா என்று ஒரு தப்பு கணக்கை பாஜக போட்டுக் கொண்டிருக்கிறது.
குட்கா வியாபாரிகளுக்கு துணை போன மாஜிகள்: தமிழக மக்கள் இதை என்றுமே மறக்க மாட்டார்கள். தமிழக அரசியலில் அமைச்சர்களே குட்கா வியாபாரிகளுக்கு துணையாக இருந்தது அதிமுக ஆட்சியில்தான் என்பது நாடறிந்த உண்மை. நீதிமன்றத்தில் நாங்கள் போராடி அந்த முன்னாள் அமைச்சர் மீதும் அது தொடர்புடைய அதிகாரிகள் மீதும் சிபிஐ விசாரணை மேற்கொண்டிருக்கிறோம். இதற்கெல்லாம் ஆட்சியாளர்களே துணையாக இருந்தார்கள்.
விஜயபாஸ்கர் வீட்டில் : முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிலிருந்து ஒரு பேப்பர் எடுக்கப்பட்டது. அதில் 85 கோடி ரூபாய் எந்தெந்த அமைச்சர்களுக்கு (அதிமுக ஆட்சியில்) தரப்பட்டன என்ற விவரங்கள் இருக்கின்றன. ஆனாலும் அதன் மீது வருமான வரித் துறையோ அமலாக்தத் துறையோ எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எந்த வகையிலாவது பாஜகவை தாங்கிப்பிடிக்கலாம் என்று மத்திய அரசின் புலன் விசாரணை அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கு நாங்கள் ஒன்றை சொல்லிக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம். ஜாபர் சாதிக் மீது பிப். 15 ஆம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவரை தேடப்படும் குற்றவாளி என்றும் அறிவித்தீர்கள்.
பிப்ரவரி 21 ஆம் தேதி மங்கை என்ற படத்தின் வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது என்சிபி எங்கே போனது. 2013 ஆம் ஆண்டே அவர் மீது ஒரு வழக்கு வந்தது. அப்போது அதிமுகதான் ஆட்சியில் இருந்தது. ஒழுங்காக அந்த வழக்கை நடத்தவில்லை. ஆனால் ஜாபர் சாதிக்கிற்காக வழக்கை நடத்தியவர் பாஜகவை சேர்ந்த பால் கனகராஜ்.
2 கோடி உறுப்பினர்கள்: அன்று ஜாபர் சாதிக்கை காப்பாற்றியது இன்று போதை பொருள் குறித்து பேசிக் கொண்டிருக்கும் அதிமுக ஆட்சியில்தான் நடந்தது. எங்கள் இயக்கத்தில் 2 கோடிக்கு மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். வருகிறவர்களை எல்லாம் சோதித்து பார்த்து கட்சியில் சேர்க்க முடியாது. அதே நேரம் அவர்கள் தவறு செய்தவர்கள் என தெரிந்தவுடன் உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜாபர் சாதிக் கட்சியை விட்டே நீக்கப்பட்டுவிட்டார். போதை பொருள் நடமாட்டத்திற்கு காரணமான மாநிலம் குஜராத். அதன் முந்தரா துறைமுகத்தில் 21 ஆயிரம், 9 ஆயிரம் கிலோ போதை பொருட்கள் கடத்தப்பட்டுள்ளன. பாகிஸ்தான் அமைப்புகளுடன் எல்லாம் கடத்தப்பட்டுள்ளன. உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் போதை கடத்தல் வழக்குகள் அதிகமாக போடப்பட்டுள்ளன.
பகல் கனவு: தேர்தல் நேரத்தில் திமுக மீது ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சுமத்தி விட முடியாதா என பகல் கனவு கண்டு கொண்டிருக்கிற மத்திய அரசுக்கு ஒன்றை சொல்லிக் கொள்கிறோம். தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல . அவர்களுக்கு தெரியும் திமுக என்றைக்கும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாது. அதற்கு துணை போகிறவர்களையும் கட்சியில் வைத்துக் கொள்ள மாட்டோம்.
பொய் பிரச்சாரம்: ஜாபர் சாதிக்கின் போதை பொருள்களை தமிழகத்திலா பிடித்தார்கள். அது டெல்லியில்தானே பிடிக்கப்பட்டது. தமிழகத்தில் கஞ்சா செடியும் பயிரிடப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் போல் வடஇந்தியாவில் முன்னேற்ற இல்லை என அந்த மக்கள் கேட்கிறார்கள். எனவே தமிழகம் மீது பொய் பிரச்சாரம் செய்தால்தான் அந்த மக்கள் தமிழகம் குறித்து பேச மாட்டார்கள் என்பதற்காக இப்படி செய்கிறார்கள். ஜாபர் சாதிக்கிற்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்கு அதிமுகவிலும் பாஜகவிலும்தான் தொடர்பு இருக்கிறது. இவ்வாறு ரகுபதி தெரிவித்துள்ளார்.
-
2021 தேர்தல் முடிவுகள்.. மக்கள் மனநிலையை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டிய கருத்துக் கணிப்புகள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
வேல்முருகன் 72 மணி நேர கெடு யாருக்கு லாபம்? தவெக பிளான் B.. திமுகவுக்கு வாழ்வுரிமை கட்சியால் லாஸ்? -
சென்னையில் இப்தார் நோன்பில் திடீர் திருப்பம்: தேஜ கூட்டணி தலைவர்கள் செய்த "அந்த" காரியம்! திமுக குஷி -
என் கையில் ஏதும் இல்லை.. டெல்லியிடம் போய் கேளுங்கள்.. அன்புமணி போட்ட போன்.. யாரும் எடுக்கலையாமே! -
கூடுதல் தொகுதிகள்.. கறார் கம்யூனிஸ்ட்.. அதிர்ச்சியில் அறிவாலயம்.. தொடரும் இழுபறி -
இந்திய கம்யூனிஸ்ட் நினைச்சது நடக்குமா? திமுக கூட்டணியில் நாளை தொகுதி பங்கீடு கையெழுத்தாக வாய்ப்பு -
‘மெடிக்கல் மினிஸ்டர்' பதவி தர மறுத்த கருணாநிதி? எம்.ஜி.ஆர் கிளப்பிய ஊழல் புகார்.. உடைந்த திமுக! -
எம்.ஜி.ஆர் சொன்ன திருடன் போலீஸ் கதை! கருணாநிதி சொன்ன கட்டுமரக் கதை! - 1980ல் மீண்டும் அதிமுக ஆட்சி -
விஜயை பாஜக கூட்டணிக்குள் கொண்டு வரும் வரை அவகாசம்! மெகா பிளான்! சந்தேகம் தரும் தமிழக தேர்தல் அட்டவணை -
உடல் மெலிந்து.. 2 மாதத்திற்கு பின் அறிவாலயம் வந்த துரைமுருகன்! கைதாங்கலாக கூட்டிசென்ற பூச்சி முருகன் -
ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. 234 தொகுதிகளும் என் கன்ட்ரோல்.. மா.செ. கூட்டத்தில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications