நான் நிரபராதி! உயர்நீதிமன்ற விழாவில் பங்கேற்றதில் தவறில்லை! அண்ணாமலைக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!
சென்னை: தன் மீது போடப்பட்ட வழக்குகளில் தாம் நிரபராதி என்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொண்ட விழாவில் தாம் பங்கேற்றதில் தவறேதும் இல்லை என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ரகுபதி மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அவரை அனுமதிக்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியிருந்தார்.
அந்தக் கடிதத்துக்கு விளக்கும் அளிக்கும் வகையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். அதன் விவரம் வருமாறு;

நீதிமன்றம் நிராகரிப்பு
''என் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் புதுக்கோட்டை நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் ஆகியவற்றால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. வேண்டுமென்றே கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை என் மீது உள்ள வழக்குகளின் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.''

தவறு இல்லை
''இரண்டு நீதிமன்றத்தால் நான் விடுதலை செய்யப்பட்டுள்ளேன். மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் உச்சநீதிமன்ற நீதிபதி கலந்து கொண்ட விழாவில் நான் கலந்து கொண்டது தவறு இல்லை. கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் என்னை பழிவாங்க வேண்டும் என்பதற்காக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர்.''

வெளிப்படைத்தன்மை
''புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த ஆண்டு பொதுப்பணித் துறை சார்பாக 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாசன கால்வாய் தூர்வாரப்படுகிறது.
விவசாயிகளின் நலனுக்காக தற்போது மாவட்டத்தில் 55 வாய்க்கால்கள் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த ஆண்டு வெளிப்படையாகவும் எந்தவித முறைகேடுகளும் இல்லாமல் தூர்வாரும் பணி நடைபெற உள்ளது. எங்கேயாவது முறைகேடு நடக்கிறது என்று தெரிந்தால் உடனடியாக தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.''

உச்சநீதிமன்ற கிளை
''திமுக அரசை பொறுத்தவரை தமிழர்களுக்கும் தமிழுக்கும் தான் முன்னுரிமை கொடுக்கப்படும். உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தமிழக முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார் இதுகுறித்து உச்சநீதிமன்றம் தான் முடிவு எடுக்க வேண்டும்.''
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications