Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1991 முதல் சினிமாவில் இருக்கேன்! ரஜினியை நேரில் சந்தித்தால் நிச்சயம் ஆதங்கத்தை சொல்வேன்.. ரோஜா பளீச்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சந்திரபாபு நாயுடுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரித்து பேசியதால் எனக்கு அவர் மீது கோபம் வந்தது என நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்தார்.

தெலுங்கு தேசம் கட்சியின் நிர்வாகி பண்டாரு , அமைச்சர் ரோஜாவின் கேரக்டருக்கு களங்கம் ஏற்படும் வகையில் அவரை பேசினார். அதற்காக அவர் மீது ரோஜா சட்டரீதியில் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

Minister Roja attacks Rajinikanth for supporting Chandrababu Naidu

இந்த நிலையில் இதுகுறித்து ஆந்திர மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜா தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: பெண்களுக்கு அரசியல் சற்று கடினமான ஒன்றுதான். அதிலும் சினிமாவை விட அரசியல் கஷ்டம்தான். நான் அறியாமல் அரசியலுக்கு வந்துவிட்டேன்.

என் தந்தையின் நண்பர் ஆந்திர- தமிழக எல்லையான சத்தியவேட்டில் எம்எல்ஏவாக போட்டியிட்டார். அப்போது நான் தெலுங்கு, தமிழ் சினிமாவில் நான் முன்னணி ஹீரோயினாக இருந்தேன். அதனால் நான் அவருக்கு பிரச்சாரம் செய்தால் வெல்வேன் என என் அப்பாவிடம் கேட்டார். அப்படித்தான் அரசியலுக்கு வந்தேன்.

அரசியலில் ஒரு பெண் தைரியமாக, நேர்மையாக இருந்தால் யாருக்கும் பிடிக்காது, சிலர் மனதிற்குள்ளேயே வைத்திருப்பார்கள். பண்டாரு சத்தியநாராயணன் போன்ற ஆட்கள் இப்படித்தான் ஏதாவது பேசுவார்கள். இப்போது அரசியலில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்கே பெண்கள் இருக்கிறார்கள்.

இதே 33 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்துவிட்டு நிறைய பெண்கள் அரசியலுக்கு வந்தால் இவர்கள் எல்லாம் என்ன செய்வார்கள். என்னை பற்றிய அவதூறு இப்போது வந்ததில்லை. நான் ஹைதராபாத்துக்கு சென்ற போதே தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஒருவர் கையில் சிடி வைத்துக் கொண்டு இது நீங்கள் நடித்த ஆபாச படத்தின் சிடி என்றார்.

நான் உடனே சரி பிரஸ்ஸுக்கு கொடுத்து வெளியே விடுங்கள் என்றேன். அதற்கு அவர், எனக்கு மேனர்ஸ் இருக்கிறது . நான் அப்படி செய்ய மாட்டேன் என கூறிவிட்டு இல்லாத ஒன்றை இருப்பதாக கூறியே என்னை பிளாக்மெயில் செய்து வருகிறார்கள். ஒரு அமைச்சர், நடிகை, ஆளும் கட்சியில் இருக்கும் என்னை பற்றியே இப்படி பேசுகிறார்களே. அப்படி என்றால் சாதாரண பெண்கள் என்றால் என்னவெல்லாம் பேசுவார்கள். அவர்கள் கடைசி வரை உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு அழுது கொண்டிருக்க வேண்டுமா?

நான் 33 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். என் தோழிகள் மீனா, ராதிகா, நவ்நீத் கவுர் உள்ளிட்டோர் எனக்கு போன் செய்து இப்படி பேசுகிறார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இப்படி ஒரு பெண் குறித்து கேவலமாக பேசுபவர் இருப்பார்களா, இவர் பெண், மனைவி, மருமகளுக்கு என்ன மரியாதை கொடுப்பார். எனவே இவரை விடக் கூடாது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன். அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளேன்.

குஷ்பு என்னிடம் பேசினார். பண்டாரு குறித்து தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளேன். 33 சதவீத இடஒதுக்கீடு கிடைத்துவிட்டால் பெண்ணை அவதூறாக பேசுவதை நிறுத்துவார்கள் என நான் நினைக்கவில்லை. 33 சதவீதம் இடஒதுக்கீட்டால் நிறைய பெண்கள் அரசியலுக்கு வந்தால் நிறைய சட்டங்கள் வரலாம். என் மாவட்டத்தில் நான் மட்டும்தான் பெண் எம்எல்ஏ.

இந்த இடஒதுக்கீடு கிடைத்தால் என் மாவட்டத்தில் மேலும் சில பெண் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் வருவார். எங்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் நாங்கள் சேர்ந்து நிற்போம். மோடியின் ஆதரவால்தான் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தோம் என சொல்பவர்கள் சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள். ரஜினியே ஒரு டயலாக் சொன்னாரே- குரைக்காத நாயும் இல்லை, குறை சொல்லாத வாயும் இல்லை. இது இரண்டும் இல்லாத ஊரே இல்லை.

Minister Roja attacks Rajinikanth for supporting Chandrababu Naidu

மக்கள் சந்திரபாபு நாயுடுவுக்கு ஓட்டு போட்டாங்க. ஆனால் எந்த நல்லதையும் செய்யாமல் ஊழலைத்தான் செய்தார். அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததன் பேரில்தான் அவரை சிறையில் வைத்துள்ளார்கள். அமைச்சரவையில் ஒப்புதலே இல்லாமல் சந்திரபாபு நாயுடு நிறைய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த நிறுவனம் எதுவுமே செய்யாமல் ரூ 371 கோடியை அவர்களுக்கு கொடுத்து அதை வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளார். இதற்கெல்லாம் ஆதாரம் இருப்பதால்தான் அவரை கைது செய்தார்கள். ரஜினி மீது நான் ஏன் கோபப்பட்டேன் என்றால், என்டிஆர் நூற்றாண்டு விழாவுக்கு வந்துவிட்டு சந்திரபாபு நாயுடுவையே ஆதரித்து பேசினார். அவர் ஊழல்வாதி என தெரிந்தும் அவர்தான் மீண்டும் முதல்வராக வர வேண்டும் என சொன்னால் அதை பார்த்துக் கொண்டு நாங்கள் எப்படி சும்மா இருப்போம்.

ஆந்திராவில் ரஜினிக்கு என ஒரு மரியாதை இருக்கிறது. அவருடைய வாய்ஸுக்கு ஒரு பவர் இருக்கிறது. அப்படியிருக்கும் போது அவர் மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது இல்லையா? ஆந்திரா சட்டசபை தேர்தலில் 175 தொகுதிகளிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்தான் வெல்லும். ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எப்போதும் தனித்துதான் நிற்கும். லோக்சபா தேர்தலில் யார் வெல்கிறார்களோ அவர்கள் எங்கள் மாநிலத்திற்கு என்ன செய்வார்கள் என்பதை பொருத்துதான் ஜெகனின் ஆதரவு இருக்கும். 1991 ஆம் ஆண்டு முதல் நான் சினிமாவில் இருக்கிறேன். என்னை பற்றி ஒருவர் தவறாக சொல்லும் போது சினிமா துறை எனக்கு ஆதரவாக கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். ஆனால் ஒரு சிலரை தவிர வேறு யாரும் செய்யவில்லைஇவ்வாறு அமைச்சர் ரோஜா தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+