உதயநிதி ஸ்டாலினுக்கு இப்படி ஒரு பாராட்டு.. அதுவும் சட்டசபையில்.. அதிர வைத்த அமைச்சர் நாசர்!
சென்னை : கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை.. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை.. ! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது என சட்டசபையில் வெகுவாக பாராட்டி உள்ளார் அமைச்சர் நாசர்.
Recommended Video
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சனிக்கிழமை அன்று வோண்மை, கால்நடை மீன்வளம் மற்றும் பால்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், அறிவிப்புகளை வெளியிடும் முன்பு உதயநிதி ஸ்டாலினை வெகுவாக பாராட்டினார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிலப்பதிகாரம்
அமைச்சர் நாசர் சட்டசபையில் உதயநிதியை பாராட்டி பேசியதாவது: சங்க தமிழை பழித்து, இடக்கு செய்த கனகன் மற்றும் விஜயன் தலையில் கல்லை சுமந்து சேர நாட்டு கண்ணகிக்கு கோட்டம் காட்டியவன் சேர நாட்டுமன்னன் செங்குட்டுவன்... அது சிலப்பதிகாரம்.. எங்கள் இணைதளபதியே.. உதயநிதியே நீ தூக்கிக்காட்டியதொரு செங்கலில் புனித ஜார்ஜ் கோட்டையே களங்க கோட்டையானது. இது செங்கலதிகாரம்..

உதயநிதி
கல்லுக்கும் உங்களுக்கும் என்ன உறவோ தெரியவில்லை. உங்களின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி புரட்டி போட்டது தமிழ் திரை உலகை.. ஒரே ஒரு செங்கல் புரட்டி போட்டது ஆட்சி அதிகாரத்தை.. ! முன்பெல்லாம் சேப்பாக்கம் ஸ்டேடியத்திற்கு போனால் தோனி வந்தால் தான் கூட்டம் வரும். இப்ப நம்ம அருமை சகோதரர் உதயநிதி வந்தாலே கூட்டம் வருகிறது. அந்த வரலாற்றையும் மாற்றிவிட்டார் உதயநிதி என்று அமைச்சர் நாசர் பாராட்டினார். அத்துடன் அமைச்சர் துரைமுருகனையும் வெகுவாக வாழ்த்தினார் அமைச்சர் நாசர். தனக்கு வாக்களித்த மக்களுக்கும்,தோழமை கட்சிகளுக்கும் நன்றி கூறி சட்டசபையில் நேற்று மானிய கோரிக்கை விவாதத்தில் நாசர் பேசினார்.

கட்டளை
முன்னதாக சட்டப்பேரவையில், நீதிமன்ற கட்டணம் தொடர்பான திருத்தச் சட்ட மசோதாவை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அறிமுகம் செய்து நேற்று முன்தினம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு புகழாரம் சூட்டினார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "தி.மு.க உறுப்பினர்கள், அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் உரைகளின்போதும், பதில் அளிக்கும்போதும் உங்களை உருவாக்கிய, ஆளாக்கிய, நம் முன்னோடிகளை குறிப்பிட்டு வணக்கம் செலுத்திப் பேசுவது முறையாக இருக்கும். ஆனால், கேள்வி நேரத்துக்கும், சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதற்கும் அதை பயன்படுத்தக் கூடாது. ஏனென்றால் நேரத்தின் அருமையைப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இங்கு இருக்கும் அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு இது என் கட்டளை." என்றார்.

முதல்வர் எச்சரிக்கை
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) மானியக் கோரிக்கை விவாதத்தின்போது தி.மு.க எம்.எல்.ஏ ஐயப்பன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் நேரத்தின் அருமை கருதி என்னைப் புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும். மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் தன்னைப் புகழ்ந்து பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

உதயநிதிக்கு பாராட்டு
நேற்றே அவை நேரத்தை வீண்டிக்க வேண்டாம் என எச்சரித்தேன். எதையும் அளவோடு வைத்துக் கொள்ளுங்கள்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்தார். இந்த சூழலில் தான் அமைச்சர் நாசர் , உதயநிதி ஸ்டாலினை பாராட்டி சட்டசபையில் பேசிய வீடியோ வெளியாகி உள்ளது.
-
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications