Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தெரிஞ்சுக்கணும் மக்களே..உரக்க சத்தமிட்டு ஊரை ஏமாற்றும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் சாமிநாதன் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குடியரசு தின அணிவகுப்பு ஊர்திகள் சுழற்சி முறையில் அனுமதிக்கப்படும் நிலையில், 2023-24ஆம் ஆண்டுகளில் பங்கேற்ற தமிழ்நாடு அரசின் ஊர்திகள் இனி 2026ஆம் ஆண்டில்தான் பங்கேற்க முடியும் எனவும், அரசியல் நடைமுறையை அறியாமல் உரக்கச் சத்தமிட்டு ஊரை ஏமாற்ற முயல்வது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலை என கடுமையாக விமர்சித்துள்ளார் அமைச்சர் சாமிநாதன்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," புதுடெல்லியில் வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திக்கான அனுமதி மறுப்பு என்று எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்றைய தினம் ஒரு அரைவேக்காட்டுத்தனமாகப் பிதற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

saminathan edappadi palaniswami republic day

அன்றாடம் நடைபெறும் அரசு நிகழ்வுகளையும் அரசியலாக்கி, அதிலே ஆதாயம் காணத் துடியாகத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

குடியரசு தின விழா:

புதுடெல்லி குடியரசு தின விழாவில் ஆண்டுதோறும் கடமைப் பாதையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பதனை ஒன்றிய அரசின் சார்பில் அதற்கென அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவின் மூலம் அந்தந்த மாநிலங்களின் சார்பாக, மாநிலங்களின் வளர்ச்சி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில் அலங்கார ஊர்திகளின் வடிவமைப்புகள் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, அவை உயர்மட்ட குழுவினரால் உறுதி செய்யப்படுகின்றன.

தமிழ்நாடு அலங்கார ஊர்தி:

இந்த நிலையில், இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் திகழும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியை வெகு சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சி அமைந்த உடன் 2022 ஆம் ஆண்டு புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அலங்கார ஊர்தி வடிவமைப்பில், சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டில் அரும்பாடுபட்ட தலைவர்களின் திருவுருவச் சிலைகளை குறிப்பாக, வ.உ.சிதம்பரனார் அவர்களை முன்னிலைப்படுத்திய அலங்கார ஊர்தியின் வடிவமைப்பினை ஒன்றிய அரசால் திட்டமிட்டு பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது.

மத்திய அரசு - முதல்வர் ஸ்டாலின்:

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்கள். அத்துடன் அனுமதி மறுக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றும் மாண்புமிகு பிரதமர் அவர்களுக்கு கடிதமும் அனுப்பினார். மேலும், ஒன்றிய அரசினால் அனுமதி மறுக்கப்பட்ட இந்த அலங்கார ஊர்திகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலே கொடியசைத்து தொடங்கி வைத்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அலங்கார ஊர்திகள் சென்று இலட்சக்கணக்கான மக்கள் அதைப் பார்த்துப் பாராட்டியது வரலாறு. இதனை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் மறந்து விட்டாரா ? பின்னர் கடந்த 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு அரசின் சார்பில் அலங்கார ஊர்திகள் சிறப்பாக பங்கேற்றதோடு, 2024ஆம் ஆண்டுக்கு சிறந்த வடிவமைப்பிற்கான மூன்றாம் பரிசினையும் தமிழ்நாடு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசின் விதி:

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் சார்பில் நடைபெறுகின்ற குடியரசு தின அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் 6 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு; ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள மாநிலங்களின் சார்பில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்கப்படுமேயானால், அடுத்து வருகின்ற மூன்றாம் ஆண்டு வாய்ப்பு வழங்கிட இயலாது என்று எழுத்துப்பூர்வமாக அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது என்றாலும், அந்தந்த மாநிலங்களின் சார்பில் வழங்கப்படுகின்ற சிறந்த கருப்பொருள்களுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்திகளை கடமைப்பாதையில் பங்கேற்காமல், அணிவகுப்பு நிறைவு பெற்ற பின்னர் பொதுமக்கள் பார்வைக்கு நிறுத்திக் கொள்ளலாம் என்றும் ஒன்றிய அரசு கடிதம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி:

இது போன்ற அரசின் நடைமுறைகளை, உள் விவகாரங்களை ஒரு முதலமைச்சராக பணியாற்றியவர் என்பதையும் மறந்துவிட்டு. ஏதோ வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்கின்ற பெயரில், யாரோ எழுதித்தருகின்ற தகவல்களின் அடிப்படையில், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் ஒரு தவறான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க ஆண்ட 10ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் ஏதோ தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் தமிழ்நாட்டின் சார்பிலே அலங்கார ஊர்திகள் பங்கேற்றுச் சிறப்பித்தது போன்ற ஒரு மாயையை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உருவாக்கியுள்ளார். அ.தி.மு.க ஆட்சி நடைபெற்ற 10 ஆண்டுகால ஆட்சியில் கடந்த 2012, 2013, 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் அலங்கார ஊர்திகள் பங்கேற்கவில்லை என்கின்ற விவரமே அவருக்கு தெரியவில்லை.

விதிமுறைகள்:

2014, 2016, 2017, 2019, 2020, 2021,ஆகிய 6 ஆண்டுகள் மட்டுமே அதுவும் தொடர்ச்சியாக இல்லாமல், அ.தி.மு.க. ஆட்சியில் அலங்கார ஊர்திகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. மேலும், அன்றைய கால கட்டங்களில் ஒன்றிய அரசு தற்போது கொண்டு வந்துள்ள விதிமுறைகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு அரசு:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுரையின்பேரில், தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த ஆண்டுகளில் மாநிலத்தின் கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றுகின்ற வகையில், அலங்கார ஊர்திக்கான வடிவமைப்பு மாதிரிகளை ஒன்றிய அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினர் பலமுறை பார்த்து வியந்து பாராட்டியுள்ளதையும் எதிர்க்கட்சித் தலைவர் அறிந்துகொள்ளவில்லை.

திராவிட மாடல்:

இனி வரும் காலங்களில் இந்தியாவுக்கும் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டியாக திகழ்கின்ற வகையில், நல்ல பல திட்டங்களை நாளும் தொடர்ந்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திராவிட மாடல் நாயகர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களைப் பற்றியும், அவர்கள் நல்லாட்சியைப் பற்றியும் குறை கூறுவதை விட்டுவிட்டு, ஆக்கபூர்வமான பணிகளிலே ஈடுபட வேண்டும். மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பதவி என்பது மிகுந்த மரியாதைக்குரியது என்பதை அவர் உணரவேண்டும். அரசுக்கு ஆக்கபூர்வமான நல்ல யோசனைகளை கருத்துகளைக் கூறி அந்தப் பதவிக்குரிய மரியாதையைக் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பாரபட்சமான செயல்:

இதே நேரத்தில், இரண்டு ஆண்டுகள் ஒரு மாநிலத்தின் ஊர்திகள் தொடர்ந்து இடம்பெற்றால் மூன்றாவது ஆண்டில் அனுமதிக்கப்படாது என்று ஒரு நடைமுறையை ஒன்றிய அரசின் ஆணை தெரிவித்துள்ளது. அந்த நடைமுறையை ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களுக்கும் ஒரே சீராக பின்பற்றாமல் உத்தரபிரதேசம், குஜராத், ஆகிய மாநிலங்களுக்கு தொடர்ந்து மூன்றாவது முறை அனுமதித்துவிட்டு தமிழ்நாட்டிற்கு மட்டும் அனுமதி மறுப்பது நியாயமும் நேர்மையும் அற்ற; பாரபட்சமான செயல் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்." என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+