வாய் கொழுப்பெடுத்து பேசும் சீமான்.. திருப்பி அடிச்சா தாங்க மாட்டீங்க! பதிலடி கொடுத்த சேகர் பாபு.!
சென்னை: முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி குறித்து சீமான் தொடர்ந்து வாய் கொழுப்பு எடுத்து பேசி வருகிறார்.. அவருடைய உயரம் என்னவென்று அவருக்கு தெரியவில்லை.. கண்ணாடி கூண்டில் இருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார் என தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய சாட்டை துரைமுருகன் முன்னாள் முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி குறித்து மிகவும் அவதூறாக பேசினார்.

மேலும் சர்ச்சைக்குரிய பாடல் ஒன்றையும் சாட்டை துரைமுருகன் பாடி காட்டினார். இதை அடுத்து திமுக ஐடி விங் பிரிவு நிர்வாகிகள் இதுகுறித்து திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவரை, நீதிமன்றம் விடுவித்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்," புள்ளபூச்சி என்பதால் கைது செய்து விட்டார்கள்.. புலியையோ சிங்கத்தையோ கைது செய்ய முடியுமா? நான் அந்த பாடலை பாடுகிறேன்.. முடிந்தால் என்னை கைது செய்யட்டும்.. தொட்டுப் பார்க்கட்டும்" எனக் கூறி அந்த பாடலை பாடி காட்டினார். இதனால் திமுகவினர் சீமானை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும் இதுதொடர்பாக சீமான் மீது சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சீமான் வாய் கொழுப்பு அடக்கப்படுமென தமிழக இந்து சமய நிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் குத்தம்பாக்கத்தில் சுமர 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.427 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து முனையத்தின் பணிகளை அமைச்சர் சேகர்பாபு அமைச்சர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,”பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பூவிருந்தவல்லி அருகே குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மார்ச் மாதத்திற்குள் இந்த பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்” என்றார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சி சீமான் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியது குறித்து பேசிய அவர்,"தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்தில் திமுக ஆட்சியை எதிர்க்கின்ற எதிர்க்கட்சிகளுக்கு பேசுவதற்கு எந்த பிரச்சினையும் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே திமுக மீதும் அதன் தலைவர்கள் மீதும் அவதூறு பரப்பி வருகிறார்கள். காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்று சொல்வார்கள்.
சீமான் தொடர்ந்து வாய்க்கொழுப்பு எடுத்து பேசி வருகிறார். அவருடைய உயரம் என்னவென்று அவருக்கு தெரியவில்லை. கண்ணாடி கூண்டில் இருந்து கல்லெறிந்து கொண்டிருக்கிறார். திரும்ப தாக்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தால் அவர் தாங்க மாட்டார். சீமான் மீது பொதுநல விரும்பிகள் பலர் காவல் நிலையத்தில் தொடர்ந்து புகார்களை கொடுத்து வருகிறார்கள். சட்டப்படியான சாத்தியக்கூறுகள் இருக்கும் போது நிச்சயம் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேபோல சாதி குறித்த பேச்சுக்கு சீமான் ஏற்கனவே வருத்தம் தெரிவித்திருந்தார். அதே வார்த்தையை திரும்ப பயன்படுத்துகிறார் என்றால் அவரது பார்வை அவை நோக்கி திரும்ப வேண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட வார்த்தைகளை தொடர்ந்து பேசியும் பயன்படுத்தியும் வருகிறார். சீமானின் வாய் கொழுப்பிற்கு மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள். சீமான் கைது செய்யப்படுவாரா என கேட்கிறார்கள் சட்டப்படி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications