ஜீஜீ வீட்டில் யாரு? அட அமைச்சர் சேகர் பாபுவா.. கையில் இருந்த சர்ப்ரைஸ்.. தமிழ்நாட்டிற்கே பெருமைங்க
சென்னை: யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை, நேரில் வாழ்த்தினார் அமைச்சர் சேகர் பாபு.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் போன்ற பணியிடங்களுக்கு நடக்கும் முக்கியமான ஆல் இந்தியா தேர்வாகும் இது.
கடந்த 2022ல் நடந்த தேர்வுக்கான முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளன. இந்தியாவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. எப்போதும் பொதுத்தேர்வுகளில் ஆண்களை விட பெண்களே சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.

அந்த வகையில் இந்த முறை யுபிஎஸ்சி தேர்வுகளில் தேசிய அளவிலான தரவரிசையில் முதல் 4 இடங்களையும் பெண்களே பிடித்து அசத்தி இருக்கிறார்கள்.
மொத்தம் 933 பேர் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். இஷிதா கிஷோர் என்பவர் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்து உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வறுமையான சூழ்நிலையை கொண்ட பலர், தமிழ் வழியில் படித்த பலர் வென்றுள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து கூலித்தொழிலாளிகளின் குழந்தைகள், மிகவும் வறுமையான குடும்ப சூழ்நிலையை கொண்ட மாணவர்கள்;, அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் இந்த தேர்வில் வென்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 39 பேர் தேர்ச்சி பெற்றதாக இதில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையை சேர்ந்த ஜீஜீ என்ற மாணவி தமிழ்நாட்டு அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து உள்ளார். இவர் தேசிய அளவில் 107வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
யுபிஎஸ்சி தேர்வில் சென்னையை சேர்ந்த மதிவதினி இராவணன் 447வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். பண்ருட்டி அருகே முந்திரி விவசாயி மகள் சுஷ்மிதா, யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார். இந்திய அளவில் 528வது இடத்தை பிடித்துள்ளார்.
அதேபோல் நாமக்கல் மாவட்ட தொழில் மையத்தில் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் ஆர். ராமகிருஷ்ணன் தமிழக அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.யுபிஎஸ்சி தேர்வில் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி அகில இந்திய அளவில் 117வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அமைச்சர்: இந்த நிலையில் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு அளவில் முதல் இடம் பிடித்த மாணவியை ஜீஜீ, நேரில் வாழ்த்தினார் அமைச்சர் சேகர் பாபு.
நேரடியாக வீட்டிற்கே சென்று அமைச்சர் சேகர் பாபு இவருக்கு வாழ்த்து சொன்னார். கையில் பூங்கொத்து, இனிப்புகள், புத்தகங்கள் அடங்கிய பரிசு பொருட்களை அமைச்சர் சேகர் பாபு மாணவி ஜீஜீயை சந்தித்து கொடுத்தார்.
அவரின் இந்த சந்திப்பு நெகிழ்ச்சியாக அமைந்தது. மக்கள் சேவை துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும். பயிற்சி முடித்து நல்ல பிரிவில் பணிக்கு சேர வேண்டும் என்று அமைச்சர் சேகர் பாபு அந்த மாணவிக்கு நம்பிக்கையளித்தார்.
180 ஐஏஎஸ், 200 ஐபிஎஸ் உட்பட 1022 காலி பணியிடங்களுக்காக முதல் நிலை யுபிஎஸ்சி தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இதற்கான முடிவுகள்தான் இப்போது வெளியாகி உள்ளன.
அரசு நிர்வாகத் துறையில் ஐஏஎஸ்ஸும், காவல்துறையில் ஐபிஎஸ்ஸும், வெளியுறவுத் துறையில் ஐ.எஃப்.எஸ்ஸுமே உயரிய பதவிகளை அலங்கரிப்பார்கள். ஆனால், இந்த பதவிகளை அடைய யுபிஎஸ்சி எனப்படும் இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும்.












Click it and Unblock the Notifications