அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல கோரிக்கை வந்தால் தமிழக அரசு உதவும்.. சொல்வது அமைச்சர் சேகர்பாபு!
சென்னை: பக்தர்கள் கோரிக்கை வைத்தால் அயோத்தி ராமர் கோயில் செல்ல உதவி செய்யப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் 22ஆம் தேதி மதியம் 12.20 மணிக்கு நடைபெற உள்ளது. மூலவரான குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணி ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வருகிறது.
ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தர பிரதேச மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளையின் தலைவர் நிருத்யா கோபால் தாஸ் உள்ளிட்ட பலரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல அறநிலையத்துறை ஏற்பாடு செய்து தருமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்தார்.
அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "அயோத்தி ராமர் கோயிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என பக்தர்கள் யாரும் கோரிக்கை எதுவும் விடுக்கவில்லை. அப்படி கோரிக்கைகள் வரும் பட்சத்தில் முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று ராமர் கோயிலுக்கு செல்வதற்கு தேவையான உதவிகளை செய்ய இந்து சமய அறநிலையத் துறை தயாராக இருக்கிறது." எனத் தெரிவித்தார்.
மேலும், "திராவிட மாடல் ஆட்சியில் கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 17 கோயில்களுக்கும், நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை 8 கோயில்களுக்கும் விரிவுப்படுத்தி உள்ளோம். மேலும், நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி 20 திருக்கோயில்களில் செயல்படுத்தி வருகிறோம்." என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications