என்னாது தமிழக சட்டசபை முடக்கப்படுமா?.. எடப்பாடியின் பகல் கனவு பலிக்காது.. அமைச்சர் சேகர்பாபு பதிலடி
சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது என அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
சேலம் மாவட்டம் வேலகவுண்டனூரில் அவர் கூறுகையில் ஆளுங்கட்சி முறைகேடுகள் தொடர்ந்தால் சட்டப்பேரவையை முடக்கும் நிலை ஏற்படலாம் என மேற்கு வங்க சம்பவத்தை சுட்டிக் காட்டி எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி
இதுகுறித்து இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது. தமிழக சட்டசபையை முடக்க நினைக்கும் எடப்பாடி பழனிச்சாமியின் பகல் கனவு பலிக்காது. அத்தைக்கு மீசை முளைகட்டும்; பிறகு சித்தப்பா என பெயர் வைக்கலாம்.

சட்டசபையை முடக்குவது
தமிழக சட்டசபையை முடக்குவது என ஈபிஎஸ்ஸின் பேச்சு அதிமுகவின் அறியாமையை காட்டுகிறது. அதிமுகவின் ஆசையை மத்திய அரசுக்கு தனது பேச்சின் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தெரியப்படுத்தியுள்ளார். சட்டசபையை முடக்கினால்தான் அடுத்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி என அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது என விமர்சனம் செய்தார்.

மேற்கு வங்க ஆளுநர்
மேற்கு வங்க அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் புதிய திருப்பமாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் சனிக்கிழமை அன்று மேற்கு வங்க சட்டசபையை முடக்கியுள்ளார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 174 அடிப்படையில் மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி 12 ஆம் தேதி முதல் காலவரையறையின்றி முடக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது. மேற்கு வங்க சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்னதாக முடக்கப்பட்டுள்ளது.
Recommended Video

நீட் விவகாரம்
வரும் சட்டசபை கூட்டத் தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பிய சம்பவத்தில் அவர் மீது திமுக அரசு கடும் விமர்சனங்களை முன் வைத்தன. ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் முன் வைக்கப்பட்டது. தமிழக ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே உள்ள மோதல் போக்கால் என்ன நடக்கும் என்பதை மேற்கு வங்க சம்பவத்துடன் எடப்பாடி பழனிச்சாமி ஒப்பிட்டு பேசியுள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications