பா.ரஞ்சித் பெயரை கேட்டதுமே சேகர்பாபு தந்த ரியாக்ஷன்! கொள்ளென்று சிரித்த ஆதரவாளர்கள்! என்ன செய்தார்?
சென்னை: பா. ரஞ்சித்தா யாரு அவரு? எனக்கு தெரியாது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திமுக மீது இயக்குநர் பா.ரஞ்சித் கடுமையாக விமர்சித்திருந்தார். ரஞ்சித்தின் ட்வீட் குறித்து ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பின.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்திருந்தார். அப்போது அவர் அங்கிருந்த உணவை சோதனை செய்தது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. முதல்வர் அம்மா உணவகத்தை ஆய்வு செய்வது ஒரு நாடகம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: திமுகவில் எத்தனையோ சீனியர்கள் இருக்கும் போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியை கொடுப்பது நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அவரையே மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதில் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை ஏற்றால் என்ன ஏற்காவிட்டால் என்ன? அம்மா உணவகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ரூ 21 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அம்மா உணவகம் அதிமுக ஆட்சி காலத்திலேயே பட்டு போய் இருந்தது.
அந்த பட்டு போன திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கையிலே எடுத்ததற்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்க வேண்டும். முதல்வரை பாராட்ட வேண்டும். அதை விட்டுவிட்டு வஞ்சக எண்ணத்துடன், குறுகிய புத்தியோடு அதை விமர்சனம் செய்வதை நாட்டு மக்களும் ஏற்க மாட்டார்கள். அவர் கட்சியை சேர்ந்த தொண்டர்களே ஏற்க மாட்டார்கள்.
எங்கள் முதல்வரை பொருத்தமட்டில் வசை பாடுபவர்களையும் வாழ்த்தும் அளவுக்கு மக்கள் பணி மேற்கொண்டு வருகிறார். எதிரிகளாக இருந்தாலும் துரோகிகளாக இருந்தாலும் கருணை உள்ளத்துடன் ஏற்றுக் கொள்ள கூடியவர். அனைவரையும் மன்னிக்கும் குணம் கொண்டவர் எங்கள் முதல்வர் என்பதற்கு அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்கியதே சிறந்த உதாரணம் ஆகும்.
அம்மா உணவகத்தில் முதல்வர் சாப்பிட்டு பார்த்த போது அவர் முகம் சுளிக்கவே இல்லை. சாதம் தண்ணியாக இருந்ததால் அதை சாப்பிட்டுவிட்டு அதிலேயே மிச்சத்தை போட்டுவிட்டார். முதல்வர் எல்லா தரப்பு மக்களையும் சமமாக நடத்துபவர். முதல்வரே முகம் சுளித்ததாக எடப்பாடி பழனிசாமி ஏன் கூறுகிறார், என்றால் அவருடைய கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து வருகிறது. சீக்கிரமே காணாமல் போய்விடும் என நினைக்கிறார். அதனால்தான் அவர் அப்படி பேசுகிறார்.
மக்கள் திட்டங்கள் எதுவாக இருந்தாலும் அதற்கு உயிர் கொடுப்பவர் முதல்வர் ஸ்டாலின் என்பது இந்த திட்டத்தின் வாயிலாக தெரிகிறது என்றார். அப்போது அவரிடம் "தலித் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக பா.ரஞ்சித் தெரிவித்துள்ளாரே" அது குறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் ரஞ்சித்தா, யார் அவரு? அவர் யாருன்னே எனக்கு தெரியாது. அரசியல்வாதியாக இருந்தால் எனக்கு தெரிந்திருக்கும் என தெரிவித்தார்.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை நடந்த மறுநாளே பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு நீண்ட பதிவை போட்டிருந்தார். அதில் நான் திமுகவுக்குத்தானே ஓட்டு போட்டேன். என்னை போல் தலித் மக்களும் திமுகவுக்குத்தான் வாக்களித்திருப்பார்கள். அப்படியிருக்கும்போது திமுக ஆட்சியிலும் தலித் மக்களுக்கு பாதுகாப்பில்லை என தொனியில் ஒரு கருத்தை தெரிவித்த அவர் சிபிஐ விசாரணை தேவை என்றும் தெரிவித்திருந்தார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications