அடேங்கப்பா சென்னை மாநகரத்துக்கு இத்தனை திட்டங்களா? சட்டசபையில் சேகர்பாபு சரமாரி அறிவிப்புகள்!
சென்னை: சென்னை மாநகரில் சேத்துப்பட்டு பசுமை பூங்கா, சுரங்கப் பாதைகள் மேம்பாடு, கால்பந்து மைதானம் என பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு.
தமிழ்நாடு சட்டசபையில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை அமைச்சர் சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்;

சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள சேத்துப்பட்டு பசுமை பூங்கா (Eco Park) ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.
ரூ.8 கோடி மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் பகுதியில் அமைந்துள்ள 10 சுரங்கப் பாதைகள், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தேவையான வசதிகளுடன் மேம்படுத்தப்படும்.
ரூ.10 கோடி மதிப்பீட்டில் திரு.வி.க நகர் கொன்னூர் நெடுஞ்சாலையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சமுதாயக்கூடம் அமைக்கப்படும்.

ரூ.52 கோடி மதிப்பீட்டில் சமுதாயக் கூடங்கள் மேம்படுத்தப்படும்.
ரூ.8 கோடி மதிப்பீட்டில் ஆர்.கே. நகர் இளையா தெருவில் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல் அமைக்கப்படும்.
ரூ.2 கோடி மதிப்பீட்டில் சிறிய ரக கால்பந்து மைதானம், சேத்துப்பட்டு அப்பாசாமி தெருவில் அமைக்கப்படும்.

ரூ.10 கோடி மதிப்பீட்டில் இராயபுரம் மூலகொத்தளத்தில் 0.35 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
சேப்பாக்கம் பகுதியில் மக்களுக்கு கட்டணமில்லா சிகிச்சை அளிக்க ரூ.10 கோடி மதிப்பீட்டில் இரத்த சுத்திகரிப்பு மையம் (Dialysis Centre) அமைக்கப்படும்
ரூ.60 கோடி மதிப்பீட்டில் ஆறு பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
ரூ. 5 கோடி மதிப்பீட்டில் தாம்பரத்தில் DR.A.P.J.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் மேம்படுத்தப்படும்.

ரூ.6 கோடி மதிப்பீட்டில் அம்பத்தூர் பானு நகரில் நவீன வசதிகள் கொண்ட விளையாட்டு மைதானம் அமைக்கப்படும்.
போரூர் ஏரி, பெருங்குடி ஏரி உள்ளிட்டவை தலா ரூ.33 கோடியில் மேம்படுத்தப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications