"இது திமுகவா? இதெல்லாம் நிஜமா?".. திடீர்னு வானதிக்கு வந்த டவுட்.. "கிளியர்" செய்த அமைச்சர் சேகர்பாபு
வானதி சீனிவாசனுக்கு சேகர்பாபு பதிலளித்துள்ளார்
சென்னை: சசிகலா உடன் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கிய பின்னரும் தினம் தினம் ஆடியோக்களை ரிலீஸ் செய்து அதிமுகவில் கலகம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார் சசிகலா. ஊராடங்கு முடிந்தவுடன் அனைத்து இடங்களிலும் சுற்றுபயணம் வருவேன். மீண்டும் தலைமை பொறுப்புக்கு வந்து அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை வழிநடத்துவேன் என்றும் கூறியுள்ளார் சசிகலா.
சேகர்பாபு, அதிமுகவில் இருந்தபோதும் சரி, திமுகவில் இருந்த போதும் சரி, எந்த கட்சியில் இருந்தாலும், தொகுதியில் இவருக்கென்று தனி விசுவாசிகள் உண்டு...
அதிரடி அரசியலுக்கு சொந்தக்காரர். ஒருகாலத்தில் அதிமுகவின் வடசென்னை அடையாளமாக விளங்கியவர்... பொது இடங்களில் ஜெயலலிதா இவரை பெயர் சொல்லியே கூப்பிட்டு பேசுவார்.. அவ்வளவு செல்வாக்கு பெற்றவர்..

ஸ்டாலின்
அதனால்தான், திமுகவில் இவர் இணைந்தபிறகும்கூட, களப்பணி, கட்சி பணி என சுழன்று வேலை பார்க்க முடிந்தது.. தன் தொகுதியில் ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், டக்கென ஸ்டாலினுக்கே போனை போட்டு பேசுவார்.

பக்தர்கள்
அதேசமயம், அதிகாரிகளை நாசூக்காக வேலை வாங்கும் திறமைசாலி.. கடந்த சில வருடங்களாகவே தமிழ்நாட்டில் "கோயில்களை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும்" என்ற கோரிக்கைகள் எழுந்து வருகிறது.. இது தொடர்பான பிரச்னைகளை எதிர்கொள்ள, சேகர்பாபுதான் சரியான நபர் என்ற எண்ணத்தில்தான் இந்த பொறுப்பினை ஸ்டாலின் அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பை தந்துள்ளதாகவே கூறப்பட்டது.

கோயில்கள்
இந்த பொறுப்பை ஏற்றதில் இருந்தே அதிரடியை கையில் எடுத்துள்ளர் சேகர்பாபு.. "அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களின் சொத்து ஆவணங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்று சேகர்பாபு முதல் உத்தரவை போட்டார்.. இதை கேட்டதுமே கோவையின் "ஆன்மீக பகுதி"யில் ஒரு லேசான நடுக்கம் வந்தது.. அடுத்த செகண்டே, ஈஷா அமைப்பின் ஜக்கி வாசுதேவ் அறநிலையத்துறையை பாராட்டி ஒரு ட்வீட் போட்டார்.

அர்ச்சகர்
அடுத்ததாக, இந்து அறநிலையத்துறையில் நிதி ஆதாரத்தை அதிகரிப்பதற்காக, கோயில் சொத்துகளை மீட்டு வருவாயை உயர்த்த வேண்டும் என்ற திட்டம் திமுகவிடம் உள்ளது.. அடுத்ததாக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராகலாம் போன்ற அடுத்தடுத்த அறிவிப்புகளை சேகர்பாபு வெளியிட்டார்.. இதனை பாஜக தலைவர் முருகன் வரவேற்றார். ஆனால் வானதி சீனிவாசன் கடுமையாக விமர்சித்திருந்தார்.

வானதி சீனிவாசன்
"இந்துக்களுக்கும், இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் திமுகவினர் என நான் சொல்லவில்லை. அக்கட்சியின் தலைவர்களே சொல்லி இருக்கின்றனர்... எனவே, கோயில்கள் விஷயத்தில் திமுக அரசு காட்டும் முனைப்பு தன்னிச்சையானதா, உண்மையாகவே இவர்களுக்கு ஆர்வம் இருந்து செய்கிறார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது...

இந்துக்கள்
ஏனெனில், அவர்களின் கடந்த கால வரலாறு அப்படி... தமிழ்நாடு அரசு உண்மையாகவே இந்துக் கோயில்களின் மீது அக்கறை இருந்தால், கோயில் சொத்துகள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும்" என்று வானதி சீனிவாசன் சொல்லி இருந்தார். இந்நிலையில், சேகர்பாபுவிடம் வானதியின் சந்தேகம் குறித்து கருத்து கேட்கப்பட்டது..

பதிலடி
அதற்கு சேகர்பாபு, "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேயாக தான் தெரியும்... ஆன்மீகம் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்து மக்களை பிளவுபடுத்தி அரசியல் செய்ய துடிக்கும் சக்திகளுக்கு இதுபோன்ற செயல்பாடுகள் சந்தேகத்தை தான் ஏற்படுத்தும்... ஆனால், வார்த்தை ஜாலங்களுக்காக இல்லாமல் நிச்சயமாக செயல்படுத்தகூடிய திட்டங்களைத்தான் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது" என்று பதிலடி தந்துள்ளார்.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா












Click it and Unblock the Notifications