பாஜக திட்டங்கள் தமிழ்நாட்டில் எடுபடாது - நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
சென்னை: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக மாற்றினால் என்ன தவறு என தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார். இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு, "வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.கவினர் நினைத்த செயல் நடைபெறலாம். தமிழ்நாட்டில் நடக்காது" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
"சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது. சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது. பாஜகவிடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது" எனத் தெரிவித்துள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு விவகாரம் குறித்து நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "அயோத்தி இங்கிலாந்திலோ ஐரோப்பாவிலோ இல்லை, இந்தியாவில்தான் உள்ளது. எனவே தமிழ்நாடு அயோத்தியைப் போல மாறுவதில் எந்தத் தவறும் இல்லை" என்று தெரிவித்தார்.
மேலும் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "தீபம் ஏற்றியதில் எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு எந்த கலவரமும் ஏற்படவில்லையே. இந்த விவகாரத்தை திமுக அரசு மதக் கலவரமாக சித்தரிப்பது தவறு. இது இந்து உரிமைகளை மீறும் முயற்சி" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நயினார் நாகேந்திரன் கருத்துக்கு பதில் அளித்துள்ள தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "வடமாநிலங்களில் வேண்டுமானால் பா.ஜ.கவினர் நினைத்த செயல் நடைபெறலாம். தமிழ்நாட்டில் நடக்காது. தமிழ்நாடு அயோத்தியாக மாறும் என்ற நயினார் நாகேந்திரனின் கனவு பகல் கனவாகவே முடியும். இது திராவிட மண், இது ராமானுஜர் மண். இதுபோன்ற செயல்களுக்கு மக்கள் அனுமதி தரமாட்டார்கள்" என திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
"சாதி, மத, இன மொழிகளுக்கு அப்பாற்பட்ட தமிழ்நாட்டில் பா.ஜ.க. திட்டங்கள் எல்லாம் எடுபடாது. சனாதனம் மட்டுமல்ல எந்தவொரு கொள்கையும் மக்களை பிளவுபடுத்த கூடாது. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அதிமுகவில் உள்ளவர்கள் ஆளாளுக்கு ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் அதிமுக ஆகாய பல்டி அடிக்கிறது. பாஜகவிடம் முழுவதும் அடிமைபடுத்தப்பட்ட அ.தி.மு.க. என்ற தேர் 2026-ல் நிலைக்கு வராது" எனத் தெரிவித்துள்ளார்.
-
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
விஜய் அரசுக்கு அக்னி பரீட்சை.. திருப்பரங்குன்றம் தீபம் வழக்கில் நிலைப்பாடு என்ன? ஐகோர்ட் கேள்வி!












Click it and Unblock the Notifications