கொரோனாவில் இருந்து மீண்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ - நலமுடன் வீடு திரும்பினார்
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் செல்லூர் ராஜூ நலமுடன் வீடு திரும்பியுள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து பூரண குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தொற்றில் இருந்து செல்லூர் ராஜூ குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஒன்றரை கோடி பேரை தொட்டுள்ளது கொரோனா வைரஸ். 80 லட்சம் பேர் வரை கொரோனாவில் இருந்து மீண்டிருக்கின்றனர்.

கொரோனாவிற்கு ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், அரசு அதிகாரி, அரசியல்வாதிகள் என்றெல்லாம் வித்தியாசம் தெரியாது. தகுதி உள்ளவர்கள் தப்பிப்பிழைப்பார்கள் என்ற தத்துவத்தை இந்த நோய்க்கு நாம் பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளவர்கள் இந்த நோயில் இருந்து போராடி மீண்டு விடலாம். தமிழகத்தில் 1,56, 369 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.1,07,416 பேர் குணமடைந்துள்ளனர். 2,236 பேர் மரணமடைந்துள்ளனர்.
எம்எல்ஏக்கள், அமைச்சர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, அமைச்சர் நிலோபர் கபீல் ஆகிய நான்கு அமைச்சர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர் கே.பி. அன்பழகன் சில தினங்களுக்கு முன்பு பூரண நலத்துடன் வீடு திரும்பினார். இப்போது அமைச்சர் செல்லூர் ராஜூ குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கடந்த ஜூலை 08 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லேசான அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செல்லூர் ராஜூ. பூரண நலத்துடன் இன்று வீடு திரும்பியதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications