அடுத்த விக்கெட்.. செந்தில் பாலாஜி டூ பொன்முடி! திமுகவிற்கு பெரிய நெருக்கடி.. போட்டு உடைத்த புள்ளி
சென்னை: அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் அடுத்த அமைச்சர் யார் குறி வைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இன்று பொன்முடி வழக்கில் என்ன தண்டனை வழங்கப்படும் என்று நீதிபதி ஜெயசந்திரன் அறிவிப்பார். பொன்முடி வழக்கு ஆளும் திமுகவை கிட்டத்தட்ட புரட்டி போட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து, சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

தீர்ப்பு: 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த அமைச்சர் பொன்முடி, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில்தான் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.
இதனால் இன்று பொன்முடி பதவி பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன. அதேபோல் எம்எல்ஏ பதவியும் பறிபோகும் வாய்ப்புகள் உள்ளன. இது எல்லாம் திமுகவிற்கு எதிராக திரும்பும் வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திமுக உள்ளே பதற்றம் தொற்றிக்கொண்டு உள்ளது.
இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேட்டி: அதில்,அமைச்சர் பொன்முடி வழக்கில் தீர்ப்பு வந்த நிலையில் அடுத்த அமைச்சர் யார் குறி வைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுகவிற்கு இது பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. திமுக தமிழ்நாட்டில் பலமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கூட்டணி தேசிய அளவில் பலமாக இல்லை. இது திமுகவிற்கு பெரிய பின்னடைவை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை மத்திய அரசு கருவியாக பயன்படுத்துகிறது என்று சொல்லியது. இப்போது நீதிமன்றமும் அப்படி செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் வழக்கை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்கு கூட சென்றார்கள். அந்த வழக்கில் உச்ச நீதிமன்றமே நீதிபதி ஆனந்த் வெங்கடேசனை பாராட்டினார்கள்.
அமலாக்கத்துறை, வருமான வரித்துறையை மத்திய அரசு கருவியாக பயன்படுத்துகிறது என்பதை கூட நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏனென்றால் பல மாநிலங்களில் கட்டு கட்டாக பணத்தை கண்டுபிடித்துள்ளனர். முறைகேடுகளை வெளியே கொண்டு வந்துள்ளனர். அதனால் இங்கே ரெய்டு நடத்துவதையும் நான் தவறு என்று சொல்லவே மாட்டேன்.
அதோடு இல்லாமல் .. 2017ல் லஞ்ச ஒழிப்புத்துறை செய்த மேல்முறையீடு வாதங்களை இவர்கள் சரியாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதை தற்போது நீதிபதி ஜெயசந்திரன் கூறியுள்ளார். நீதி அரசர் ஆனந்த் வெங்கடேசன் திமுக அமைச்சர்கள் வழக்கை மட்டும் எடுக்கவில்லை. அதிமுக மாஜிக்கள் அமைச்சர்கள் வழக்கையும் எடுத்துள்ளனர்.
திமுகவிற்கு இது பெரிய நெருக்கடிதான். பதவியில் இருக்கும் அமைச்சர் நீக்கப்படுவது நெருக்கடிதான். அடுத்தடுத்து அமைச்சர்கள் சிறைக்கு செல்வது திமுகவிற்கு பெரிய நெருக்கடியாக மாறி உள்ளது. என்று பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications