சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"540533".. தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? டேட்டாவை அடுக்கி செந்தில்பாலாஜி சரமாரி பதிலடி.. காரசாரம்!

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று கூறிய அதிமுக எம்எல்ஏ ரவிக்கு தமிழ்நாடு மின்வாரிய துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சரமாரி பதில் அளித்துள்ளார்.

Recommended Video

    சட்டப்பேரவை நிகழ்வுகள் 23-06-2021

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக சில இடங்களில் மின்வெட்டு பிரச்சனை ஏற்படுகிறது. 5 -10 நிமிடங்கள் திடீரென மின் தடை ஏற்படுகிறது. போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் இப்படி மின்வெட்டு ஏற்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு விளக்கம் அளித்து இருந்தார்.

    கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்? கொரோனா தடுப்பூசி 'சாதனை' சட்டென மறுநாளே சரிந்தது ஏன்? பாஜக ஆளும் 7 மாநிலங்களின் மீது சந்தேகம்?

    இந்த நிலையில் சட்டசபையில் நேற்று பேசிய அதிமுக எம்எல்ஏ ரவி, திமுக ஆட்சியில்தான் மின்வெட்டு ஏற்படுகிறது, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக இருந்தது என்று குறிப்பிட்டார்.

    தவறு

    தவறு

    அதிமுக எம்எல்ஏ ரவியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த செந்தில்பாலாஜி, கடந்த காலங்களில் மின் வாரியத்தில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து வருகிறோம். முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட அதிக செலவினங்களை சரி செய்து வருகிறோம். முக்கியமாக மின் பகிர்மான கழகத்தில் 1 லட்சத்து 33 ஆயிரம் கோடி மின் துறைக்கு கடன் இருக்கிறது. இது போக மின் தொடரமைப்பு கழகத்தில் 25 ஆயிரம் கோடி கடன் உள்ளது. மொத்தம் மின்வாரிய துறைக்கு 1.50 லட்சம் கோடி கடன் உள்ளது.

    கட்டுடன்

    கட்டுடன்

    இதற்கு வட்டி மட்டுமே ஒரு வருஷத்துக்கு 13 ஆயிரம் கோடி போன்ற ஆட்சியில் கட்டி இருக்கீங்க. வட்டி விகிதம் மட்டுமே 9.5 முதல்வர் 13% வரை உள்ளது. அவ்வளவு மோசமாக கடன் வாங்கி இருக்கீங்க. இந்த வட்டி விகிதத்தை குறைக்க பேசிக்கொண்டு இருக்கிறோம்.

    மின்சாரம்

    மின்சாரம்

    மொத்த மின்சாரத்துறையும் கடனில்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதைத்தான் மின் மிகை மாநிலம் என்று சொல்வீர்களா? மின் மிகை 2 லட்சத்து 42 ஆயிரம் விவசாயிகள் மின் இணைப்பு இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மின் மிகை மாநிலம் என்றால் இவர்களுக்கு ஏன் மின் இணைப்பு கொடுக்கவில்லை.

    உபரி

    உபரி

    மின்சாரம் உபரியாக இருந்திருந்தால் ஏன் இவர்களுக்கு இணைப்பு கொடுக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான மின்சாரத்தில் 3ல் ஒரு பகுதியை மட்டுமே தமிழ்நாடு மின் கழகம் தயாரிக்கிறது. இதில் மீதி ஒரு பகுதி மத்திய தொகுப்பு, மீதி ஒரு பகுதி தனியாரிடம் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மின்சாரம். இப்படி அதிக தொகைக்கு மின்சாரத்தை வாங்கிவிட்டு, மின் மிகை மாநிலம் என்று சொல்வது எப்படி நியாயம் ஆகும்?

    மின்வெட்டு

    மின்வெட்டு

    2016ம் ஆண்டு முதல் 2021 வரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 533 முறை மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இது உங்கள் ஆட்சியில் ஏற்பட்ட மின்வெட்டு. 3-5 ரூபாய்க்கு மின்சாரம் வழங்க தனியார் நிறுவனங்கள் தயாராக உள்ள போது, அதிமுக அரசு 7 ரூபாய்க்கு மின்சாரம் வாங்கி நிதி இழப்பை சந்தித்துள்ளது என்று செந்தில்பாலாஜி புள்ளி விவரங்களை அடுக்கி பதில் அளித்தார்.

    English summary
    Minister Senthil Balaji replies to the reasons for power cut with valid data in Tamilnadu assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X