'சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?' நெட்டிசனுக்கு அமைச்சர் கொடுத்த ரிப்ளை.. ட்விட்டரில் ரணகளம்!
சென்னை : மின் வெட்டு தொடர்பாக பதிவிட்ட நெட்டிசனிடம், அமைச்சர் செந்தில் பாலாஜி, "சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?" என்று கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் அந்த ட்வீட்டை நீக்கிய நிலையில், அவதூறு பரப்பிய அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுகவினர் பாய, எதிர் தரப்பினரோ ஊருக்கே மின் தடை இருக்க ஒருவரின் நம்பரை கேட்டு என்ன செய்ய என விமர்சிக்க ட்விட்டரே ரணகளமானது.
கோடைகாலம் என்பதால் தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு இருந்து வருவதாக மக்களிடையே புகார்கள் வருகின்றன. ஆனால், தமிழ்நாடு மின் வாரியம் அவற்றை மறுத்து வருகிறது. நாளுக்கு நாள் மின் நுகர்வு உச்சமடைந்து வந்தாலும், எவ்வித மின்வெட்டும் இன்றி மின் தேவை ஈடுகட்டப்பட்டு வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வப்போது புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், மின்வெட்டு தொடர்பாக விமர்சித்து ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜியும் உடனடியாக ரிப்ளை கொடுத்தார். "சகோதரரே, மின் இணைப்பு எண்ணை தர இயலுமா?" என அமைச்சர் செந்தில் பாலாஜி கேட்க, பதிவிட்ட நபர் தனது ட்வீட்டை உடனடியாக நீக்கினார்.
இதைத் தொடர்ந்து, திமுக மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே ட்விட்டரில் பெரிய ரணகளமே நடந்தது. பொய் குற்றச்சாட்டு சொன்னவர் அமைச்சர் கேள்வியால் பதறிப்போய் ட்வீட்டை நீக்கிவிட்டார் என திமுகவினரும், அமைச்சர், பொதுமக்களிடம் மிரட்டுவது போல பேசுவதாகவும், மின் தடை என புகார் தெரிவித்தார் மிரட்டுவதா என்றும் எதிர்க்கட்சியினர் பதிவிட்டு வருகின்றனர்.
திமுக அரசு மீதும், மின்சார வாரியத்திற்கு எதிராகவும் அவதூறு பரப்பிய அந்த நபர் மீது, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக ஆதரவாளர்கள் செந்தில் பாலாஜியிடம் முறையிட்டனர். இதையொட்டி ட்விட்டரில் திமுகவினருக்கும், எதிர்க்கட்சியினருக்கும் இடையே பெரிய ரணகளமே ஏற்பட்டது.
பின்னர், அந்த ட்வீட்டை பதிவிட்ட நபரே, "பொதுவெளியில் தரவேண்டிய அவசியம் இல்லையே அமைச்சரே? இரண்டாவது மீட்டருக்கு எழுதிக்கொடுத்து மாதக்கணக்காகிறது வந்தபாடில்லை? வீட்டுக்குள் புகுந்த பாம்புடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் வந்த ஆம்பள இல்லாத வீட்டுக்கு மின் இணைப்பு குடுத்திருக்கா உங்க அரவணைப்பில் இருக்கும் மின்வாரியம்?" என கேள்வியெழுப்பி மற்றொரு ட்வீட்டை பதிவிட்டார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications