சென்னைக்கு படையெடுத்த செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள்! இன்று தான் கிளைமேக்ஸ்! உச்சகட்ட பரபரப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவை மற்றும் கரூரிலிருந்து அவரது ஆதரவாளர்கள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
செந்தில்பாலாஜி அழுது இதுவரை பார்த்திராத அவரது ஆதரவாளர்கள், முதல்முறையாக சுருண்டு அழும் காட்சிகளை பார்த்ததும் மனம் கேட்காமல் சென்னைக்கு புறப்பட்டு விட்டனர். இதனிடையே ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால் யார் வந்தாலும் உள்ளே செல்ல அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் இல்லத்தில் நேற்று காலை 7 மணியளவில் தொடங்கிய அமலாக்கத்துறை விசாரணை நள்ளிரவு வரை நீண்டது. இந்த விசாரணையின் போது அமைச்சர் செந்தில்பாலாஜியை கேள்விகணைகளால் அதிகாரிகள் துளைத்தெடுத்து விட்டனர்.
போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது நிகழ்ந்ததாக கூறப்படும் ஜாப் ராக்கெட் கேஸ் முதல் புது வீடு கட்டிக் கொண்டிருப்பது வரை செந்தில்பாலாஜியை நோக்கி கேள்விகள் வந்திருக்கின்றன. அவரும் கேசுவலாக கூலாகவே பதில் அளித்து வந்திருக்கிறார். பிறகு நேரம் செல்ல செல்லத்தான் அமலாக்கத்துறை தனது பிடியை சற்று இறுக்கியுள்ளது.

அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கேள்விகள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே சில ஆதாரங்களை அவர் முன் வைத்திருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். இதனால் செந்தில்பாலாஜியின் பிபி உயர்ந்ததோடு இதயத்துடிப்பிலும் மாறுதல் தென்பட்டிருக்கிறது. இதையடுத்து உடனடியாக நள்ளிரவே ஓமந்தூரர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்ததும் கோவை மற்றும் கரூர் மாவட்ட திமுக முக்கிய பிரமுகர்களும், ஆதரவாளர்களும் அதிகாலையிலே சென்னைக்கு புறப்பட்டு விட்டனர். அவர்கள் வந்து சேர மதியம் ஆகிவிடும் என்ற சூழலில் அதற்குள் செந்தில்பாலாஜி டெல்லி அழைத்துச் செல்லப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications