நள்ளிரவில் என்னை அழைத்து முதல்வர் உத்தரவு போட்டார்! விளக்கம் மேல் விளக்கம் அளிக்கும் செந்தில்பாலாஜி!
சென்னை: தமிழகத்தின் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ள மின் வெட்டு பிரச்சனை குறித்து போதும் போதும் என்கிற அளவுக்கு மீண்டும் விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
மத்திய அரசு மீது பொறுப்பு சுமத்தி பேசிய அவர், சட்டசபையில் நேற்று வெளியிட்ட அதே புள்ளிவிவரத்தை மீண்டும் இன்று வெளியிட்டார்.
இதனிடையே மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியதாவது :-

உச்சபட்ச மின்நுகர்வு
''இதுவரை தமிழகத்தில் இல்லாத ஒரு நிகழ்வாக கடந்த 29.03.2022 அன்று உச்சபட்ச மின்நுகர்வோர் 17,196 மெகா வாட் அளவிற்க்கு தேவை ஏற்பட்டது. மின்சார வாரியம் முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் படி 17,196 மெகா வாட் நுகர்வு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டது. கடந்த ஆண்டுகளைப் போல் இந்த ஆண்டு கோடை காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி இருந்தார்கள்.''

72,000 டன் நிலக்கரி
''அதன்படி, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான கூடுதலாகத் தேவைப்படுகின்ற 3,000 மெகாவாட் மின்சாரத்திற்கு டெண்டர் முறையில் கொள்முதல் செய்து மின்சாரம் பெறப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. நம்முடைய அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி முழுவதுமாக கிடைக்கப்பெறவில்லை. நமக்கு நாளொன்றுக்கு 72,000 டன் நிலக்கரி தேவைப்படுகிறது. ஆனால், 47,000 டன் முதல் 50,000 டன் வரை தான் நமக்கு நிலக்கரிகள் வந்து கொண்டியிருக்கிறன. ''

14 ரேக் மட்டுமே
''எனவே, தமிழகத்திற்கு தேவையான அளவிற்கு நிலக்கரியை முழுவதுமாக வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினார். இதுபோல ஒரு நாளைக்கு 22 ரேக் நிலக்கரி கொண்டுவருவதற்கான ஒதுக்கீடு செய்வதற்கு பதிலாக ஒரு நாளைக்கு 14 ரேக் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது.''

நிலக்கரி கையிருப்பு
''எனவே, நிலக்கரிகள் இந்தாலும்கூட அதை கொண்டுவருவதற்கான ரேக்குகள் ஒதுக்கீடுகள் இல்லை. என்ற நிலையில், 22 ரேக்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்ட வேண்டும் என்றும் முதலமைச்சர் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினார். மேலும், முதலமைச்சர் பிரதமருக்கு கடிதமும் எழுதியிருக்கிறார்கள். நமக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு இல்லாத சூழ்நிலையிலும் கூட மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளன.''

நிலக்கரியின் விலை
''வெளி நாடுகளில் நிலக்கரியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என அனைவருக்கும் அறிந்தது, இருந்தாலும்கூட இந்த ஓராண்டில் நாம் வந்த இறக்குமதி நிலக்கரி செய்யப்படவில்லை, விலை உயர்வின் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தேவையான நிலக்கரியின் பற்றாக்குறையைப் போக்குவதற்காக 2 மாதங்களுக்கு மட்டும் கணக்கெடுக்கப்பட்டு 4,80,000 டன் டெண்டர் போடப்பட்டு அதற்கு நான்கு நிறுவனங்கள் பங்கு பெற்று 137 டாலர் அளவிற்கு உறுதி செய்யப்பட்டது.''

நள்ளிரவில் உத்தரவு
''அந்நிறுவனங்களுக்கு உத்தரவுகள் வழங்கப்பட்டு விரையில் அந்த நிலக்கரியை நாம் பெற்று உற்பத்திக்கு பயன்படுத்த இருக்கிறோம். இரண்டு தினங்களுக்கு முன்பாக இரவில் ஏற்பட்டு மின் விநியோகத்தின் நிறுத்தம் 796 மெகாவாட், நமக்கு மத்திய தொகுப்பிலிருந்து நாம் பெறவில்லை இருந்தாலும்கூட போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவு அது தடைப்பட்ட போது நள்ளிரவிலும் முதலமைச்சர் கண்காணித்து பல்வேறு உத்தரவுகளை வழங்கினார்கள்.''

எந்த நேரத்திலும்
''இரவாக இருந்தாலும் சரி, எந்த நேரத்திலும் முதலமைச்சர் அவர்கள் சீரான மின் விநியோக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வழிகாட்டினார்கள். ஓராண்டிற்குள் 22,000 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன, 8,905 மின்மாற்றி அமைக்கும் பணியை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். 2,200 கோடி அளவிற்கு வட்டி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக சேமிப்பு உருவாக்கப்பட்டிருக்கின்றன.''
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications