போனஸை போட்டு விடுங்க..தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை! பாமக ராமதாஸ் பொய் சொல்கிறார்..சிவசங்கர் காட்டம்
சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களுக்கும் பிற பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கும் தீபாவளி ஊக்கத் தொகையை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் பாமக நிறுவனமான ராமதாஸ். இந்த நிலையில் அவரது அறிக்கை உண்மைக்கு புறமானது என கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆன சிவசங்கர்.
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக்கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு தீப ஒளி திருநாளையொட்டி 20% ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 10-ஆம் தேதி அறிவித்திருந்தார். அதன் பிறகு இன்றுடன் 20 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு தீப ஒளி ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.

அதேபோல், மேலும் பல பொதுத் துறை நிறுவனங்களின் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை இன்னும் வழங்கப்படவில்லை. உழைக்கும் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் அரசு காட்டும் தேவையற்ற தாமதம் கண்டிக்கத்தக்கது என அறிக்கை வெளியிட்டுருந்தார் பாமக நிறுவனரான ராமதாஸ்.
இந்த நிலையில் அவரது அறிக்கை உண்மைக்கு புறமானது என கண்டனம் தெரிவித்திருக்கிறார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆன சிவசங்கர். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2024 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்துக் கழக பணியாளர்களின் போனஸ் குறித்த, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர்.ச.ராமதாஸின் X-வலை தள அறிக்கைக்கு, போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கண்டனம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் தமிழ்நாட்டில் மிக சிறந்த நிர்வாகத்தை வழங்கி வருகிறார்கள். 1
10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களை சீரழித்து சென்றுள்ள நிலையில், இந்த அரசானது பொதுமக்களின் போக்குவரத்துத் தேவை மற்றும் சேவையைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்துக் கழகங்களை மறுசீரமைப்பு செய்து, பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து, புதிய பேருந்துகளை கொள்முதல் செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மிகுந்த நிதி நெருக்கடியில் இருகின்ற நிலையிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசின் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 741. C மற்றும் D பிரிவு பணியாளர்களுக்கு, 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகையாக ரூ.182.32 கோடி வழங்குவதற்கு உத்தரவிட்டு. அரசு ஆணை எண்: 310, நிதித் துறை நாள்: 14/10/2024, வாயிலாக, நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, அரசு ஆணை (நிலை) எண்: 124, போக்குவரத்துத் துறை நாள்: 25/10/2024 ன்படி உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ரூ.182.32 கோடி போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்தும், அறியாததுபோல மருத்துவர் ச.ராமதாஸ் அவர்கள் X- தளத்தில் குறிப்பிட்டுள்ளது தேவையற்றது. நடுநிலையாளர்களும், பிற மாநிலத்தை சார்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் போக்குவரத்துத் துறையின் செயல்பாடுகளை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அதை பொறுத்துக்கொள்ள மனமில்லாமலும், வேறு அரசியல் செய்ய வழி இல்லாமலும் உண்மைக்கு புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது கண்டனத்திற்குறியதாகும்." என கூறியுள்ளது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications