ஸ்டிரைக் முடிவில் மாற்றமில்லை.. தள்ளிப்போன பேச்சுவார்த்தை! போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கறார்
சென்னை: பொங்கலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறன. இந்நிலையில் அமைச்சர் சிவசங்கருடன் இன்று பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தொழிற்சங்க நிர்வாகிகள், திட்டமிட்டபடி வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும் என்று கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கின்றன. குறிப்பாக கடந்த காலங்களில் தீபாவளி, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகை நாட்களில் இவர்களின் அர்ப்பணிப்பு பாராட்டதக்கதாக இருந்திருக்கிறது. ஆனால், போதுமான ஊழியர்கள் இல்லாததால் பணிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, புதியதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கப்பட வேண்டும் என்று ஊழியர்கள் போராடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக வேலை நிறுத்த போராட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை. மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை.
இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, காலியாகவுள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
சிஐடியு தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சௌந்தரராஜன் கூறுகையில், "நாங்கள் வேலை நிறுத்தம் அறிவித்தவுடன் அரசு பேச்சு வார்த்தைக்கு முன்வந்தது. இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. ஆனால் எங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் எந்த பதிலும் இல்லை. அமைச்சர் பொங்கல் வரை பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். எனவே இந்த பொங்கலாவது போக்குவரத்து ஊழியர்களுக்கு சிறப்பான பொங்கலாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அழைப்பு விடுத்திருந்தார். பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், "போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனில் கூடுதல் நிதி செலவாகும். எனவே மாநில நிதியமைச்சகத்திடம் கலந்தாலோசித்து முடிவு தெரிவிக்கப்படும். அதற்கு ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டிருக்கிறது. நாளை மறுநாள் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்" என்று கூறியுள்ளார்.
பின்னர் பேசிய தொழிற்சங்க நிர்வாகிகள், "பேச்சுவார்த்தை மூலம் நல்ல முடிவை எட்ட வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாளை மறுநாள் வரை அமைச்சரின் பதிலுக்காக காத்திருக்கிறோம். அமைச்சரிடமிருந்து பதில் வரும் வரை எங்களின் வேலை நிறுத்த போராட்ட முடிவு தொடரும்" என சிஐடியு தலைவர் சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications