மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தை.. அதிமுக ‘சார்’களை மறந்துவிட்டீரா பழனிசாமி?: அமைச்சர் சிவசங்கர்
சென்னை: "சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? என அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை பெரம்பூரில் பள்ளி மாணவிகள் 3 பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர் என விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி. அவருக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை பெரம்பூரை சேர்ந்த பள்ளி சிறுமி தனது தோழியின் இல்ல விழாவிற்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என்ற புகாரின் அடிப்படையில் உடனடியாக வழக்கு பதிந்து தேடுதல் வேட்டையை துரிதப்படுத்தினர் காவல்துறையினர். மாணவியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்து அவரின் இருப்பிடத்தை கண்டறிந்த காவல்துறையினர் அங்கு சென்று சிறுமியை மீட்டுள்ளனர்.
மேலும் அவரோடு இருந்த இரண்டு பள்ளி சிறுமிகளையும் மீட்டுள்ளனர். மூன்று சிறுமிகளையும் காதலிப்பதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்தியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து குற்றவாளிகள் அனைவரையும் POCSO சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் காவல்துறையினர். மேற்கொண்டு இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
புகார் பெறப்பட்ட உடனே விரைவாக செயலாற்றி பள்ளி மாணவிகளை கண்டறிந்து குற்றவாளிகளை கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. மாண்புமிகு முதலமைச்சரின் வழிகாட்டுதல் படி பெண்கள் தொடர்பான புகார்களுக்கு கடந்த அதிமுக ஆட்சியை போன்று அலட்சியமாக இல்லாமல் தீவிரமாக செயலாற்றி வருகிறது தமிழ்நாடு காவல்துறை. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விரைந்து நீதி கிடைக்கும் வகையில் குற்றத்தின் மீதான விசாரணையை வேகப்படுத்தி குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனையை பெற்றுக்கொடுத்தும் வருகிறது திராவிட மாடல் ஆட்சி.
விரைவாக நடவடிக்கை எடுத்துவிட்டார்களே என்ற விரக்தியிலும் தனக்கு அரசியல் ஆதாயம் கிடைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் அலையும் எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல அரசை குறை கூறி அவதூறுபதிவு போட்டுள்ளார்.
"சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.?
மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ''சார் யார்'' என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ''சார் யார்'' என்பது மறந்து போனதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல் அரசை குறை கூறினால் அதை மக்களே ஏற்க மாட்டார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமயிலான திராவிட மாடல் ஆட்சி பெண்கள் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வருகிறதோ அதே அளவு முக்கியத்துவதோடு பெண்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமது சமூக வலைதள பதிவில், "SIR போன்றவர்களை ஆட்சியாளர்கள் காப்பாற்ற முனைவதால் தான், தமிழ்நாட்டில் பல "SIR"கள், பல ரூபங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்தி வருகின்றனர். சட்டங்களை கடுமையாக்குவதாக சொன்னால் மட்டும் போதாது; அவற்றை செயல்பாட்டில் கொண்டு வந்தால் தான் குற்றவாளிகளுக்கு குற்றம் செய்வதற்கு அச்சம் ஏற்படும் என்பதை ஸ்டாலின் மாடல் திமுக அரசு உணர வேண்டும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.
-
12 காங்.எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் கிடையாதா? "டாப்பில்" செல்வப்பெருந்தகை? திமுக நெருக்கடி? -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
ரஞ்சனா நாச்சியார் ஒயிட் பேப்பர் காட்டி விஜய்யை அலற விட்டாரே? ராமநாதபுரம் திமுகவுக்கு அதிர்ஷ்டம்தான் -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
வருகிறார் மாஸ்டர்மைண்ட்.. டெல்லி களமிறக்கும் ஐபிஎஸ்.. சரியாக தமிழக தேர்தல் நேரத்தில் பயங்கர பிளான்! -
நம்மகிட்ட என்ன இல்லை.. பாமக தொடங்கி 37 வருஷமாச்சு.. ஆனால்.. குமுறி தள்ளிய அன்புமணி -
20 தொகுதிகள்.. அதிமுகவில் இருந்து வந்தவர்களை அரவணைக்கும் அறிவாலயம்.. சரிகட்டும் வேலையில் ஸ்டாலின்! -
Election Exclusive: இன்னும் என்ன பண்றீங்க..கோபத்தில் கண் சிவந்த ஸ்டாலின்! இன்னைக்குள்ள முடிங்க.. சுறுசுறுப்பான சீனியர்ஸ் -
NDA கூட்ட பேனரில் எடப்பாடி பழனிசாமி படம் புறக்கணிப்பு.. அதிர்ச்சியில் அதிமுகவினர்! என்னங்க நடக்குது? -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்! -
7 கேட்ட மதிமுக.. 5க்கு குறைத்த திமுக.. தனிச்சின்னமும் கிடையாது.. வைகோவிடம் நேரடியாக சொன்ன ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications