அரசு பஸ் ஊழியர்களுக்கு கொட்டப்போகுது பணம்.. அமைச்சர் சிவசங்கர் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.17.15 கோடி, ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட 8 போக்குவரத்து கழகங்கள் இருக்கின்றன.

எட்டு போக்குவரத்து கழகங்களில் சேர்த்து மொத்தம் 20,127 பஸ்கள் உள்ளன. இவற்றில் 18,723 பஸ்கள் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 1 லட்சத்து 16 ஆயிரம் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
அரசு போக்குவரத்து கழகத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர் களுக்கான காலி பணியிடங்கள் அதிகரித்து வருவதால் பஸ்களின் இயக்கத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இது ஒருபுறம் எனில் தமிழக போக்குவரத்து கழகங்களில் இந்த வார இறுதிக்குள் 600 முதல் 700 டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் போக்குவரத்து கழகங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை மேலும் குறையும். இதன் காரணமாக பணியாளர்கள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இந்நிலையில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, பண பலன்களை அரசு வழங்க வேண்டிய உள்ளது. ஏராளமான போக்குவரத்துக் கழக ஊழியர்கள், ஓய்வுக்கு பின்பான பண பலனுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை ரூ.17.15 கோடி, ஒப்பந்த நிலுவைத் தொகை ரூ.171.05 கோடி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து வரும் 1.14 லட்சம் பணியாளர்களால், தினமும் 20 ஆயிரத்து 111 பஸ்கள் வரை இயக்கப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் 1.70 கோடி பயணிகள் தினமும் பயன் பெறுகின்றனர்.
கொரோனா பெருந்துயர் காலமான 2020, 2021-ம் ஆண்டுகளில் மக்களின் உயிர்காக்கும் பொருட்டு அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பின்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் அத்தியாவசியமான பஸ் சேவைகளுக்காக, பஸ்களை இயக்கின. அப்போது, போக்குவரத்து பணியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது பணிபுரிந்தனர். அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களை கவுரவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.17.15 கோடி வழங்குவதற்கு ஆணை வெளியிடப்பட்டு உள்ளது.
நிலுவைத்தொகை : மேலும், கொரோனா காலத்துக்கு பின்னர், போக்குவரத்துக் கழகங்கள் கடும் நிதி நெருக்கடியில் இருந்த போதிலும், தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, 14-வது ஊதிய ஒப்பந்தத்தை 1-9-2019 முதல் அமல்படுத்தி, ஊதிய உயர்வு அளித்து, அதன்படி தற்போது ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வரை உள்ள காலத்துக்கான ஊதிய நிலுவைத்தொகையான ரூ.171.05 கோடி வழங்குவதற்கு முதலமைச்சர் உத்தரவின் பேரில் ஆணை வெளியிடப்பட்டு உள்ளது" இவ்வாறு அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications